Singapore news

சிங்கப்பூரில் புதிய வீடுகள் விற்பனைக்கு வருகை!விண்ணப்பங்கள் அதிகம்!

சிங்கப்பூரின் சிராங்கூனில் தேவைகேற்ப கட்டி விற்கப்படும் வீடுகளுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை அதிகம்.

அங்கு மொத்தம் 129 புதிய வீடுகள் விற்பனைக்கு வருகின்றன.ஆனால், அதன் எண்ணிக்கையை விட 13 மடங்கு அதிகமாக விண்ணப்பங்கள் வந்திருக்கின்றன.

கிட்டத்தட்ட 2390 விண்ணப்பங்கள் வந்துள்ளன.

அதற்கு காரணம் சிராங்கூனில் தேவைகேற்ப கட்டி விற்கப்படும் வீடுகள் விற்பனைக்கு வந்து பத்தாண்டுக்கும் மேல் ஆகி விட்டது என்று கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

சுமார் 5,500 புதிய வீடுகள் மே மாதத்தில் விற்பனைக்கு விடப்பட்டன.அதற்கு 20,000 விண்ணப்பங்கள் வந்தன.

சுமார் 5,000 விண்ணப்பங்கள் சிராங்கூன்,பிடோக் ஆகிய வட்டாரங்களில் உள்ள வீடுகளுக்காக வந்துள்ளன.