நடப்புக்கு வரும் புதிய வரியால் சரியும் அமெரிக்க பங்குகளின் விலை…!!!

நடப்புக்கு வரும் புதிய வரியால் சரியும் அமெரிக்க பங்குகளின் விலை...!!!

மெக்சிகோ, கனடா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் மீது அமெரிக்க அதிபர் விதித்த வரி நடப்புக்கு வரவிருக்கும் நிலையில் அமெரிக்க பங்குகளின் விலை சரிந்தன.

Dow Jones குறியீடு 1.5 சதவீதம் சரிந்து 43,191.24 ஆக உள்ளது.

S&P 500 குறியீடு 1.8 சதவீதம் சரிந்து 5849.72 ஆக உள்ளது.

Nasdaq குறியீடு 2.6 சதவீதம் சரிந்து 18,350.19 ஆக உள்ளது.

கனடா மற்றும் மெக்சிகோவிற்கு எதிரான வரிகள்-அத்துடன் சீன இறக்குமதிகள் மீது விதிக்கப்படும் விகிதங்களின் அதிகரிப்பு-செவ்வாய்கிழமை அமலுக்கு வரும் நிலையில், பணவீக்கம் வேகமடைய வாய்ப்புள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

இதற்கிடையில், ஆசிய பங்குகள் மற்றும் ஐரோப்பிய பாதுகாப்பு துறை சார்ந்த பங்குகள் ஏற்றம் கண்டன.

ஐரோப்பிய ஒன்றியம் உக்ரைனுக்கு இராணுவ உதவியை அதிகரிக்க உறுதியளித்துள்ளது.

மேலும் உலகின் நிச்சயமற்ற சூழல் காரணமாக ஐரோப்பிய நாடுகளும் தங்களது பாதுகாப்பு செலவினங்களை அதிகரிக்க முடிவு செய்துள்ளன.

இது பங்கு விலையில் எதிரொலித்தது.

Follow us on : click here ⏬

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan