சிங்கப்பூர் : வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றி சென்ற லாரி விபத்தில் சிக்கியது!! 5 பேர் மருத்துவமனையில் அனுமதி!!

சிங்கப்பூர் : பொங்கோலில் லாரி மற்றும் கார் மோதி கொண்டு விபத்து ஏற்பட்டது.இந்த விபத்தில் 5 வெளிநாட்டு ஊழியர்கள் காயமடைந்தனர்.
காயமடைந்த வெளிநாட்டு ஊழியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
கவனக்குறைவாக லாரியை ஓட்டியதாக 41 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டதாக 8 World செய்தித்தளம் வெளியிட்டது.
இச்சம்பவம் குறித்து மார்ச் 1 ஆம் தேதி மாலை சுமார் 6.40 மணியளவில் புகார் வந்ததாக காவல்துறை கூறியது.
லாரியில் இருந்த ஐவரும் வெளிநாட்டு ஊழியர்கள் என்று 8 World செய்தித்தளம் தெரிவித்தது.
அவர்கள் 25 வயது முதல் 45 வயத்துக்குட்பட்டவர்கள்.
மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டது.
Follow us on : click here