சாதனை படைத்தார்..!!! மகளிர் பேட்மிட்டன் வீராங்கனை இயோ ஜியா மின்..!!!

சாதனை படைத்தார்..!!! மகளிர் பேட்மிட்டன் வீராங்கனை இயோ ஜியா மின்..!!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரின் பேட்மிண்டன் வீராங்கனை இயோ ஜியா மின் ஜெர்மன் பேட்மின்ட்டன் பொது விருதை வென்றுள்ளார்.

இயோ ஜியா மின் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 2) நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் வியட்நாமின் குயென் துய் லினை வீழ்த்தினார்.

இதனால் உலக தரவரிசையில் 29 வது இடத்தில் உள்ள வியட்நாமின் குயென் துய் லினை வீழ்த்திய பெருமை இவரை சேரும்.

ஜெர்மனியின் முல்ஹெய்மில் உள்ள வெஸ்டெனெர்ஜி ஸ்போர்தாலேயில், சிங்கப்பூரின் முன்னணி மகளிர் ஒற்றையர் வீராங்கனை 41 நிமிடங்களில் 21-16, 21-17 என்ற கணக்கில் எதிரணியை வீழ்த்தினார்.

26 வயதான யோவின் கடைசி BWF பட்டம் ஆகஸ்ட் 2019 இல் சூப்பர் 100 ஹைதராபாத் ஓபன் பேட்மிட்டனில் கிடைத்தது. மேலும் அவரது சமீபத்திய பட்டம் 2024 போலந்து ஓபனில் கிடைத்தது.இது BWF உலக சுற்றுப்பயண போட்டியை விட ஒரு படி கீழே உள்ள சர்வதேச சவால் நிகழ்வாகும்.

போட்டியில் வெற்றி பெற்ற பின் இயோ செய்தியாளர்களிடம் பேசியது, “நான் பல இழப்புகள் மற்றும் பின்னடைவுகளைச் சந்தித்திருக்கிறேன், இந்த வெற்றி அதை இனிமையாக்கியது ” என்று கூறினார்.

“போட்டியில் வெற்றி பெற வேண்டுமானால்,ஒவ்வொரு நாளும் சிறப்பாக விளையாட வேண்டும். என்னால் அதைச் செய்ய முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. எனது பயிற்சியாளருக்கு நான் நன்றி கூறுகிறேன்,” என்று இயோ கூறினார்.