சீனாவில் 3 வயது சிறுமி தன் தாய்க்கு கூறிய அறிவுரை இணையத்தில் வைரல்..!!!

சீனாவில் 3 வயது சிறுமி தன் தாய்க்கு கூறிய அறிவுரை இணையத்தில் வைரல்..!!!

சீனாவின் வடபகுதியைச் சேர்ந்த 3 வயது சிறுமி ஒருவர் தன் தாயிடம் பேசிய அந்த ஒரு வார்த்தைதான் இப்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

சிறுமியின் தாய் இணையத்தில் பிரபலமானவர்.
அவருக்கு 75,000 க்கும் மேற்பட்ட ஃபாலோவர்ஸ் உள்ளனர்.

இவர் தன் அன்றாட வாழ்க்கை காட்சிகளை வீடியோவாக எடுத்து பதிவிடுவார்.

இந்நிலையில் அவர் தன்னுடைய 3 வயது மகள் மிபாவ் பேசிய வார்த்தைகளை வீடியோவாக எடுத்து பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் சிறுமி தன் தாயிடம்,“மற்றவர்கள் முன்பு என்னை திட்டாதீர்கள், என்னை மரியாதையுடன் நடத்துங்கள்” என்று கூறியுள்ளார்.

பொது இடங்களில் தனது தாய் கண்டிக்கும் போது தனக்கு அழுகை வருவதாக அந்தச் சிறுமி குறிப்பிட்டுள்ளார்.

மற்றவர்கள் தன்னைப் பார்த்து சிரிக்க கூடாது என்று அந்த சிறுமி நினைத்து தன் தாயிடம் கூறியுள்ளார்.

சிறுமியின் இந்த நேரடியான பேச்சுக்கு நெட்டிசன்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

அதை ஏற்றுக்கொண்ட அவரது தாயார், இனிமேல் அந்த தவறை செய்யமாட்டேன் என்று தன் மகளிடம் உறுதியளித்துள்ளார்.