Singapore news

கிருமி தொற்றிலிருந்து குணமடைந்த சிங்கப்பூர் பிரதமர் லீ!

சிங்கப்பூர் பிரதமர் லீ க்கு இரண்டாவது முறையாக தொற்று உறுதிப்படுத்தப்பட்டு, வீட்டில் ஓய்வெடுத்து கொண்டிருந்தார்.

“ நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக´´ தமது Facebook பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்தோனேஷியா பிரதமர் Joho Widodo,அவரது மனைவி Ibu Iriana ஆகியோர் சிங்கப்பூருக்கு வருகைப் புரிந்துள்ளனர்.

அவர்களை லீ நேரில் சந்தித்தார்.

அவருக்கு மிகவும் பிடித்த உணவான “Chicken Friedrice´´ சாப்பிட்டு மகிழ்ந்ததாகவும் கூறினார்.

இந்தோனேஷியா பிரதமர் நீடித்த நிலைத்தன்மை நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றுவதற்காக சிங்கப்பூருக்கு வந்துள்ளார்.

நகரங்களின் நிலையான வளர்ச்சி, பருவநிலை மாற்றம் ஆகியவை பெரிய சவால்களாக இருக்கின்றன.

இந்த பிரச்சனைகளில் இந்தோனேஷியாவுடன் தொடர்ந்து பணியாற்ற விரும்புவதாகவும் கூறினார்.

இவ்வாண்டு (2023) இறுதியில் நடைபெற உள்ள ஆசியான் உச்சநிலை மாநாட்டுக்கு Joko தலைமை தாங்கும்போது மீண்டும் அவரைச் சந்திக்க ஆர்வமுடன் காத்திருக்க போவதாக தமது Facebook பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.