IP வந்த பிறகும் சிங்கப்பூர் செல்ல காலதாமதம் ஆவதற்கு இது தான் காரணமா?

IP வந்த பிறகும் சிங்கப்பூர் செல்ல காலதாமதம் ஆவதற்கு இது தான் காரணமா?

விசா வந்த பிறகும் சிங்கப்பூர் செல்வதற்கு காலதாமதமாகிறது.அதற்கு room registration கிடைக்காமல் இருப்பதே காரணமாக கூறுகிறார்கள்.இப்பதிவில் room registration குறித்து தற்போதுள்ள விதிமுறைகள் குறித்தும் தெளிவாக தெரிந்துகொள்வோம்.

இந்தியாவிலிருந்து சிங்கப்பூர் செல்லும் போது முன்பெல்லாம் Room registration என்று எதுவும் கிடையாது.ஆனால் இப்போது ஊழியர்களுக்கு ரூம் ரெஜிஸ்ட்ரேஷன் செய்வது என்பது மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது.முன்பெல்லாம் ஒரே ரூமில் எத்தனை பேர் வேண்டுமானாலும் தங்கிக் கொள்ளலாம்.நிறுவனங்கள் ஊழியர்களை எங்கு வேண்டுமெனாலும் தங்க வைக்கலாம்.ஆனால் இப்போது MOM அந்த விதிமுறைகளை மாற்றி அமைத்துள்ளது.

ஒரு ரூமில் எத்தனை பேரை மட்டுமே தங்க வைக்க வேண்டும் என்ற புதிய விதிமுறையை அது அறிவித்துள்ளது.வெளிநாட்டு ஊழியர்கள் தங்கி இருந்தால் அவர்கள் எந்தெந்த விதிமுறைகளையெல்லாம் பின்பற்றிருக்க வேண்டும். ஊழியர்களைத் தங்க வைக்கும் நிறுவனங்கள் அல்லது விடுதியின் உரிமையாளர்கள் ஊழியர்களின் விவரங்கள் மற்றும் எத்தனை ஊழியர்கள் ஒரு ரூமில் தங்க வைக்கப்படுவார்கள் என்பதை MOM இல் தெரிவிக்க வேண்டும்.

மேலும் நிறுவனங்கள் MOM இல் அப்ரூவல் வாங்க வேண்டும். இந்த புதிய விதிமுறையால் கிடைக்கும் நன்மை :

ஓர் உதாரணமாக ஒரே ரூமில் 20 முதல் 25பேர் வரை தங்க வைக்கப்படுவார்கள்.ஆனால் பத்து பேர் மட்டுமே தங்கும் அளவில் தான் அந்த ரூம் இருக்கும். ஆனால் தற்போது ஒரு ரூமில் குறைவானவர்களே தங்குவதால் அங்கு தங்கியிருக்கும் ஊழியர்களுக்கு மனநிலை ஆரோக்கியத்துடன் இருப்பார்கள்.ஒரே ரூமில் 20க்கும் மேற்பட்டோர் இருந்தால் அவர்களின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை நீங்களே யோசித்து பாருங்கள்.அப்போ இந்த புதிய விதிமுறை நன்மை தானே.

ரூம் ரெஜிஸ்ட்ரேஷன் செய்வது ஏன் தாமதமாகிறது?


இப்போது விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளதால் அதிகளவு ரூம்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஒரு சில நிறுவனங்கள் ரூம்களுக்காக ரிஜிஸ்ட்ரேஷன் செய்தவுடன் சீக்கிரமே அப்ரூவல் கிடைத்து விடுகிறது. ஏனென்றால் அந்த நிறுவனங்கள் சொந்தமாகவே டொமெட்டரி அல்லது ரூம் வைத்திருப்பார்கள்.ஒரு சில நிறுவனங்களுக்கு ரூம்கள் கிடைப்பது சிரமமாக இருக்கிறது. அதனால் தான் ஐபி வந்த பிறகும் சிங்கப்பூருக்கு செல்வதற்கு காலதாமதமாகிறது.ஒரு சில ஏஜென்ட்கள் ஐபி வந்தவுடன் பணம் கேட்க மாட்டார்கள். ரூம் ரெஜிஸ்ட்ரேஷன் மற்றும் டிக்கெட் போட்ட பின்னரே பணத்தை செலுத்த சொல்வார்கள்.

உங்களுக்கு ஐபி விசா வந்தவுடன் பணம் செலுத்த சொன்னால் Room Registration க்கு பிறகு பணம் கட்டுவதாக கூறுங்கள். அல்லது ஐபி விசா வந்த பிறகு ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தி விட்டு மீதமுள்ள பணத்தை Room Registration க்கு பிறகு செலுத்துவதாக கூறுங்கள்.

எத்தனை நாட்களில் ரூம் ரெஜிஸ்ட்ரேஷன் கிடைக்கும் என்பது உறுதியாக சொல்ல இயலாது. எந்த பாஸ்களில் சிங்கப்பூருக்கு சென்றாலும் Registration செய்யாத ரூம்களில் தங்கினால் பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடலாம்.
MOM இல் இருந்து எப்போது வேண்டுமெனாலும் திடீரென சோதனை செய்வார்கள்.அதனால் Room Registerion செய்யப்பட்ட ரூமில் மட்டுமே தங்குவது நல்லது.

இது போன்ற பயனுள்ள தகவல்களைத் தெரிந்துகொள்ள “SGTAMILAN”இணையப் பக்கத்தில் தொடர்ந்து இணைந்திருங்கள்.

Follow us on : click here