பீஷான் வட்டாரத்தின் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்து…!!!

பீஷான் வட்டாரத்தின் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்து...!!!

சிங்கப்பூர்: பீஷான் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது.

தீ விபத்து காரணமாக அருகில் இருந்த சுமார் 40 பேர் வெளியேற்றப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்துள்ளது.

நேற்று (மார்ச் 1) மதியம் 1.30 மணியளவில் ஐந்தாவது மாடியில் உள்ள வீடு ஒன்றில் தீப்பற்றி எரிவதாக தகவல் கிடைத்தது.

அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வருவதற்குள், வீட்டில் இருந்த 4 பேர் தாங்களாகவே வீட்டை விட்டு வெளியேறினர்.

வீட்டின் படுக்கையறை மற்றும் நுழைவு அறையில் தீ விபத்து ஏற்பட்டது.

வீட்டில் வசிப்பவர்கள் பொருள் ஒன்றை தீ வைத்து எரித்தபோது கவனிக்காமல் இருந்ததால் தீயானது பரவியிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

வீட்டை சூழ்ந்த புகையால் மேல் மாடியில் உள்ள வீடுகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.