உலகின் மிக உயரமான மலையான எவரெஸ்ட் சிகரத்தில் ஏற்படும் இறப்புகளைக் குறைக்க , ஏறும் விதிகளை நேபாளம் வலுப்படுத்தியுள்ளது.
சுமார் 8,849 மீட்டர் உயரமுள்ள எவரெஸ்ட் சிகரத்தில் ஏறக்குறைய 12 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 5 பேர் காணாமல் போயுள்ளனர்.
இது குறித்து, நியூசிலாந்தைச் சேர்ந்த 69 வயதான Goy Cotter பிரபலமான வழிகாட்டி ஆவார். அவர் ஐந்து முறை எவரெஸ்ட் சிகரத்தை ஏறி சாதனைப் படைத்துள்ளார்.
வாடிக்கையாளர்கள் அனுமதி பெறுவதற்கு முன்பு 21,325 அடி (6,500 மீ) அல்லது அதற்கும் அதிகமான உயரம் கொண்ட நேபாள மலையில் ஏறியிருக்க வேண்டும்.
மருத்துவ சுகாதார நிபுணரால் நிர்ணயிக்கப்பட்டபடி அவர்கள் நல்ல ஆரோக்கியம் மற்றும் உடல் தகுதியுடன் இருப்பதாக சான்றளிக்கும் ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
மலையேறுபவர்கள் நல்ல மலையேறும் நடைமுறைகள் மற்றும் அதிக உயரத்தில் ஏறும் நுட்பங்களுக்கான அடிப்படை பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். ஏப்ரலில், மலையின் கீழ் பகுதியில் பனிக்கட்டிகள் கீழே விழுந்ததில் 3 ஷெர்பா ஏறுபவர்கள் உயிரிழந்தனர்.
மீதமுள்ளவர்கள் உடல் நலக்குறைவு அல்லது சோர்வு காரணமாக காலமானதாக அரசு மற்றும் மலையேற்ற அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒவ்வொரு ஏறுபவர்களும் சரியான ஏறும் அனுமதி பெற்றிருக்க வேண்டும். எவரெஸ்ட் இன்னும் மிகவும் அச்சுறுத்தும், தீவிரமான மலையாக இருக்கிறது என்று கோட்டர் கூறினார்.
மக்கள் பாதுகாப்பை விரும்பினால், தகுதியான [IFMGA] வழிகாட்டிகளுடன், நேபாளி அல்லது வெளிநாட்டவர்களுடன் மட்டுமே செல்ல வேண்டும் என்றும் அவர் கூறினார்.
அரசு சுற்றுலாத்துறை அதிகாரி பிக்யான் கொய்ராலா கூறுகையில், அரசு கூடுதல் விதிமுறைகளை பரிசீலித்து வருவதாகவும் ஆனால், விவரங்களை வழங்கவில்லை என்றும் கூறினார்.
இந்த ஆண்டு மார்ச் முதல் மே வரை சுமார் 478 பேருக்கு எவரெஸ்ட் மலையை ஏற அனுமதி வழங்கியுள்ளது.