முகத்தை பட்டுப்போல ஜொலிக்க வைக்கும் கோதுமை மாவின் மகிமை…!!!

முகத்தை பட்டுப்போல ஜொலிக்க வைக்கும் கோதுமை மாவின் மகிமை...!!!

அனைவருக்கும் தங்கள் சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். எனவே சருமத்தை பளபளப்பாக்க வேண்டும் என்பதற்காக கடைகளில் விற்கும் கண்ட கண்ட பொருட்களை வாங்கி பயன்படுத்துவதுண்டு. இதனால் சிலருக்கு முகப்பருக்கள் போன்றவை ஏற்பட்டு முகத்தில் கருமையான புள்ளிகள் போன்றவை வந்து முகத்தின் அழகையே கெடுத்து விடும். இதற்கு நாம் வீட்டில் உள்ள இயற்கையான பொருட்களை வைத்தே சருமத்தை பளபளப்பாக வைத்துக் கொள்ள முடியும். கோதுமை மாவை பயன்படுத்தி சரும நிறத்தை மாற்றும் சூப்பர் க்ரீமை நம் வீட்டிலேயே செய்யலாம்.

தேவையான பொருட்கள்:-

✨️ கோதுமை மாவு – இரண்டு தேக்கரண்டி

✨️ நெய் – அரை தேக்கரண்டி

✨️ பால் – இரண்டு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

👉 ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் இரண்டு ஸ்பூன் கோதுமை மாவு சேர்க்கவும்.


👉 பிறகு அதில் ஒரு டீஸ்பூன் சுத்தமான நெய்யை ஊற்றி நன்கு கலக்கவும்.

👉 பின் அதில் இரண்டு டீஸ்பூன் காய்ச்சாத பாலை ஊற்றி நன்கு கலந்து பேஸ்ட் பதத்திற்கு எடுத்துக் கொள்ளவும்.

👉 பிறகு இந்த பேஸ்ட்டை சருமத்தில் தடவி நன்றாக தேய்க்கவும்.இப்படி செய்வதால் சருமத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள் அனைத்தும் வெளியேறும்.

தேவையான பொருட்கள்:-

✨️ கோதுமை மாவு – மூன்று தேக்கரண்டி

✨️ தேன் – இரண்டு தேக்கரண்டி

✨️ தண்ணீர் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-


👉 ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் மூன்று தேக்கரண்டி கோதுமை மாவு சேர்க்கவும்.

👉 பிறகு ஒரு டீஸ்பூன் தண்ணீர் சேர்த்து கட்டியாக இல்லாமல் கலக்கவும்.

👉 பின்னர் இரண்டு தேக்கரண்டி சுத்தமான தேன் சேர்த்து நன்கு கலக்கவும்.

👉 இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி, ஒன்று முதல் இரண்டு மணி நேரம் அப்படியே உலர விடவும்.

👉 பிறகு, சருமத்தை தண்ணீரில் சுத்தம் செய்தால், சருமத்தின் பொலிவு அதிகரிக்கும்.


தேவையான பொருட்கள்:-


✨️ பாதாம் – 50 கிராம்

✨️ கஸ்தூரி மஞ்சள் தூள் – இரண்டு தேக்கரண்டி

✨️ பால் – இரண்டு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

👉 முதலில் 50 கிராம் பாதாமை மிக்ஸி ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

👉 பின்னர் கஸ்தூரி மஞ்சள் தூளை இரண்டு டீஸ்பூன் எடுத்து பாதாம் பொடியுடன் சேர்த்து நன்றாக கலந்து ஒரு டப்பாவில் போட்டு சேமித்து வைக்கவும்.

👉 ஒரு கிண்ணத்தில் ஒரு டீஸ்பூன் பாதாம் பவுடரை சேர்க்கவும்.

👉 பிறகு இரண்டு டீஸ்பூன் காய்ச்சாத பாலை சேர்த்து நன்கு கலக்கவும்.

👉 இந்தக் கலவையை சருமத்தில் தடவி சிறிது நேரம் உலர வைத்தால் சருமம் பளபளப்பாகும்.

மேற்கூறிய அனைத்தையும் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை செய்து வைத்தால் நல்ல பலன் கிடைக்கும்.