PVR inox திரையரங்கத்தின் மீது வழக்கு தொடர்ந்த ஆடவருக்கு கிடைத்த சன்மானம்..!!!

PVR inox திரையரங்கத்தின் மீது வழக்கு தொடர்ந்த ஆடவருக்கு கிடைத்த சன்மானம்..!!!

இந்தியாவின் பெங்களூரில் உள்ள ஒரு திரையரங்கம் திரைப்படம் தொடங்கும் முன் நீண்ட விளம்பரங்களை ஒளிபரப்பியதற்காக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அபிஷேக் என்ற 30 வயது நபர் கடந்த ஆண்டு (2024) டிசம்பர் மாதம் தனது நண்பர்களுடன் சினிமா பார்க்கச் சென்றார்.

திரைப்படம் மாலை 4.05க்கு தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் 25 நிமிடங்களுக்கு விளம்பரங்கள் ஒளிபரப்பப்பட்டதால் அவர் ஆத்திரமடைந்தார்.

திரைப்படம் முடிந்ததும் மீண்டும் வேலைக்குத் திரும்ப அபிஷேக் திட்டமிட்டிருந்தார்.

திரையரங்கம் தனது நேரத்தை வீணடித்ததாகவும், அதை பணத்தால் ஈடுகட்ட முடியாது என்றும் கூறி இந்தியாவின் மிகப்பெரிய சினிமா நிறுவனமான PVR inox மீது வழக்கு தொடர்ந்தார்.

நீதிமன்றம், “நேரம் விலைமதிப்பற்ற ஒன்றாகும்.. இன்றைய காலகட்டத்தில் அனைவரின் நேரத்தையும் மதிப்பது முக்கியம்.திரையரங்குகளில் 25 முதல் 30 நிமிடங்கள் வரை மக்களை விளம்பரம் பார்க்க வைப்பது ஏற்கத்தக்கது அல்ல” என்று கூறியுள்ளது.

மேலும் PVR inox அபிஷேக்கிற்கு இழப்பீடாக 55,000 ரூபாய் (845 வெள்ளி) ரொக்கமும், அவர் வழக்கிற்காக செலவு செய்த தொகையையும் வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.