சிங்கப்பூரில் வேலைக்கு செல்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான தகவல்!!

சிங்கப்பூரில் S-pass, E-pass,NTS permit,Work Permit போன்ற அனைத்து பாஸ்களில் வேலை பார்ப்பவர்கள் Tax கட்டுவது மிகவும் அவசியமானது ஆகும்.
Tax முறையாக கட்டவில்லை என்றால் மறுமுறை சிங்கப்பூர் செல்லும் போது பிரச்சனை எதிர்கொள்ள வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
Short term pass -ல் சிங்கப்பூர் செல்வோர் Tax கட்ட வேண்டிய அவசியம் இல்லை.
Work permit:
இந்தியாவில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் சம்பளம் வாங்கினால் Tax எவ்வாறு கட்டுகிறோமோ அதே போல சிங்கப்பூரிலும் $20000 டாலருக்கு மேல் சம்பளம் வாங்கினால் Tax கட்டுவது மிகவும் அவசியமானது ஆகும்.
Work பெர்மிட்டில் செல்வோர் சிலர் குறைவான சம்பளம் வாங்கினாலும் ஓவர் டைம் வேலை பார்த்து சம்பளம் அதிகமாக பெறுவதால் 20000 வெள்ளிக்கு மேல் சம்பளம் பெற்றால் முறையாக Tax file பண்ணிருக்காங்களா என்பதை உங்களுடைய HR யிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
குறிப்பாக வேலையை ரத்து செய்யும் சமயத்தில் HR யிடம் Tax முறையாக இருக்கிறதா? ஏதேனும் பிரச்சனை இருக்கிறதா? என்பதையும் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்.
Tax கட்டவில்லை என்றாலும் கம்பெனியில் இருந்து இவ்வளவு சம்பளம் தான் வாங்கியதாக HR சமர்ப்பிப்பார்கள்.
அவ்வாறு அவர்கள் சமர்ப்பிக்கவில்லை என்றால் அடுத்த கம்பெனிக்கு மாறும் போது பிரச்சனை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
அதேபோல அதிகமான சம்பளம் வாங்கினால் கல்யாணம் செய்து இருந்தால் கல்யாணச் சான்றிதழ் மற்றும் குழந்தைகள் இருந்தால் அவர்களின் பிறப்பு சான்றிதழ் ஆகியவைகளை சமர்ப்பித்தால் Tax amount குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
Work permit-ல் அதிக சம்பளம் இருக்காது, $20000 டாலருக்கும் குறைவாகத்தான் இருக்கும்.
S-pass,E-pass,NTS permit:
ஏஜென்ட்கள் மற்றும் கம்பெனிகளிடம் தெளிவாக Tax எவ்வாறு கட்ட வேண்டும் என்பதை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.
IP போடும் சம்பளத்திற்கு கம்பெனி தான் டேக்ஸ் செலுத்தும்.
வருடத்திற்கு ஒருமுறை tax செலுத்த சொல்லி லெட்டர் வரும்.
அந்த லெட்டர் மூலம் எங்கு வேண்டுமானாலும் டாக்ஸ் செலுத்திக் கொள்ளலாம்.
Tax கட்ட வேண்டும் என்ற தேதியும் குறிப்பிடப்பட்டிருக்கும் மறந்து விடாமல் அந்த தேதியில் செலுத்தி விடுங்கள்.
அந்த தேதியில் செலுத்தவில்லை என்றால் அபராதத்துடன் கட்ட வேண்டும்.
Tax செலுத்தாமல் சிங்கப்பூரிலிருந்து நாம் இந்தியா வந்து விட்டால் மீண்டும் சிங்கப்பூருக்கு திரும்ப செல்லும் போது ஏதேனும் பிரச்சனை வாய்ப்பு வரவுள்ளது.
இன்டர்வியூவில் கலந்துகொள்ளும் போதே IP யில் குறிப்பிடப்பட்டுள்ள சம்பளம் குறித்தும்,Tax குறித்தும் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilansg