“சிங்கப்பூரின் உணவு விலையை அரசாங்கம் தொடர்ந்து கண்காணிக்கும்”- அமைச்சர் கான் கிம் யோங்

"சிங்கப்பூரின் உணவு விலையை அரசாங்கம் தொடர்ந்து கண்காணிக்கும்"- அமைச்சர் கான் கிம் யோங்

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் உணவுப் பொருட்களின் விலை உடனடியாகக் குறையாது என்று துணைப் பிரதமரும், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சருமான கான் கிம் யோங் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு ஜனவரி மாதம் உலக உணவுப் பொருட்களின் விலை குறைந்துள்ளதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

எனவே சிங்கப்பூரில் மக்கள் உணவுப் பொருட்களின் விலை குறையும் என எதிர்பார்க்க முடியுமா என நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.

திரு. கான் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.

2023 ஜனவரியில் சிங்கப்பூரில் பணவீக்கம் 5.6 சதவீதமாக இருந்தது.

கடந்த மாதம் அது 0.8 சதவீதமாகக் குறைந்துள்ளது என்றார் அவர்.

இருப்பினும் உணவுப் பொருட்களின் விலை உடனடியாகக் குறையும் என்று எதிர்பார்க்க முடியாது என்று கூறியுள்ளார்.

மேலும் உணவுப் பொருட்களின் விலையை அரசு தொடர்ந்து கண்காணித்து வருவதாக கூறியுள்ளார்.

உலகளாவிய மாற்றம் உள்நாட்டில் செயலுக்கு வர சில காலம் எடுத்துக் கொள்ளலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

எரிசக்தி செலவுகள் மற்றும் தொழிலாளர் செலவுகள் போன்ற பல காரணிகள் விலையை நிர்ணயிக்கின்றன என்று திரு.கான் குறிப்பிட்டார்.

சமீபத்தில் அறிவிக்கப்பட்ட 800 வெள்ளி வவுச்சர் போன்ற உதவிகள் தொடரும் என்று கூறியுள்ளார்.