கிங்ஸ்டன் படத்தின் டிரெய்லர் அறிவிப்பு வெளியானது…!!

கிங்ஸ்டன் படத்தின் டிரெய்லர் அறிவிப்பு வெளியானது...!!

ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் உருவாகும் 25வது படம் தான் ‘கிங்ஸ்டன்’.ஹாரர் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தை கமல் பிரகாஷ் இயக்கியுள்ளார். இதனை ஜிவி பிரகாஷ் தனது பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜி ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது.

ஜி.வி பிரகாஷின் தயாரிப்பில் உருவான முதல் படம் என்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.இப்படம் மார்ச் 07ஆம் தேதி வெளியாகிறது.பேச்சுலர் படத்திற்கு பிறகு ஜி.வி.பிரகாஷ் – நடிகை திவ்யா பாரதி ஜோடி மீண்டும் இணைந்துள்ளது. இப்படத்தில் சேத்தன், அழகம் பெருமாள், இளங்கோ குமரவேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஹாரி பாட்டர், பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்ஸ் போன்ற ஹாலிவுட் படம் போன்று இந்தப் படம் உருவாகியுள்ளது என்பதால் இப்படத்தை பார்க்கும் ஆர்வம் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர், முதல் பாடல் என அடுத்தடுத்து வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி வரும் 27ம் தேதி கிங்ஸ்டன் படத்தின் டிரைலர் வெளியாகிறது.