2025 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட SG 60 வவுச்சர்கள் எந்த அளவிற்கு பயனளிக்கும்..??

2025 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட SG 60 வவுச்சர்கள் எந்த அளவிற்கு பயனளிக்கும்..??

சிங்கப்பூர்:சிங்கப்பூரின் 60வது தேசிய தினக் கொண்டாட்டங்களைக் குறிக்கும் வகையில் இந்த ஆண்டு பட்ஜெட்டில் SG60 வவுச்சர்கள் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது.

பலரது கவனத்தையும் ஈர்த்துள்ள இந்த அறிவிப்பை தொடர்ந்து, பணத்திற்கு பதிலாக வவுச்சர்கள் வழங்கப்படுவது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

பிரதமரும் நிதியமைச்சருமான திரு.லாரன்ஸ் வோங் நேற்று (பிப்ரவரி 25) வெளியிட்ட காணொளியில் பட்ஜெட் குறித்து விளக்கினார்.

சிங்கப்பூர் அரசாங்கம் இந்த பட்ஜெட்டில் தனது வளங்களை சரியாக நிர்வகித்து வருவதால், சிங்கப்பூரர்கள் பணவீக்கத்தைச் சமாளிக்கவும், அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும் தன்னால் இயன்ற அனைத்தையும் செய்து வருவதாக கூறினார்.

கடந்த சில ஆண்டுகளாக CDC வவுச்சர்கள் மிகப்பெரிய ஆதரவைப் பெற்று வருவதாக கூறிய அவர்,SG60 வவுச்சர்கள் சிங்கப்பூரர்களுக்கு அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவை சமாளிக்க உதவும் என்று கூறினார்.

SG60 வவுச்சர்கள் அருகிலுள்ள கடைக்காரர்கள் மற்றும் உணவக உரிமையாளர்களுக்கும் பயனளிக்கும் விதமாக இருக்கும் என்று திரு.வோங் கூறினார்.

அதே நேரத்தில், சிங்கப்பூரர்கள் இந்த ஆண்டு உத்தரவாதத் தொகுப்புத் திட்டம்,சரக்கு மற்றும் சேவை வரிக் கடன்கள் மூலம் பணத்தைப் பெறுவார்கள் என்று அவர் கூறினார்.

பட்ஜெட் மூலம் கிடைக்கும் நன்மைகள் பற்றிய கூடுதல் விவரங்களுக்கு,Support for you Calculator என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம் என்று பிரதமர் நினைவுபடுத்தினார்.