சிங்கப்பூர் வருபவர்கள் இது போன்ற செயலை செய்யாதீர்கள்!

சிங்கப்பூரில் அவ்வப்போது சோதனை நடவடிக்கைகள் நடத்தப்படும். அந்த சோதனை நடவடிக்கைகளில் வெளிநாட்டவர்களும் பிடிபடுவர். சட்ட விரோதமாக தங்குவது அல்லது போலி ஆவணங்களை பயன்படுத்தி கூடுதல் நாட்கள் தங்குவது உள்ளிட்ட பல குற்றச் செயலுக்காக பிடிப்படுவார்கள்.

அத்தகைய செயலைச் செய்த மகேந்திரன் என்பவருக்கு ஜூன் 1-ஆம் தேதி நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டு அவருக்கு 20 வாரங்கள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

மகேந்திரன் போலி ஆவணங்களை பயன்படுத்தி இன்னும் கூடுதல் நாட்கள் தங்குவதற்கு திட்டம் போட்டுள்ளார்.

34 வயதுடைய மகேந்திரன் NUS துணைப்பாட கட்டண சலுகை பெற்று சிங்கப்பூருக்கு வந்துள்ளார். அவர் சிங்கப்பூருக்கு 2008-ஆம் ஆண்டு படிக்க வந்துள்ளதாக கூறப்படுகிறது. துணைப்பாட கட்டண சலுகைக்கு அவர் தகுதி பெற்றதால் மூன்று ஆண்டுகள் சிங்கப்பூரில் வேலை செய்ய வேண்டும்.அவர் 2014 முதல் 2017 வரை வேலை செய்துள்ளார்.

அவரின் இ- பாஸ் அனுமதி அட்டை 2017 ஆகஸ்ட் 18-ஆம் தேதியன்று காலாவதியானது. அதன்பின் மகேந்திரன் 1 வருடத்திற்கான நீண்ட கால அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளார். அவருக்கு அனுமதியும் வழங்கப்பட்டது.

ஆகஸ்ட் 2017-ஆம் ஆண்டில் அவருக்கு ICA அடிப்படையில் நீண்டகால அனுமதி வழங்கப்பட்டது. ஒரு வருடம் கழித்து அதுவும் காலாவதியானது.

சிங்கப்பூரில் இன்னும் கூடுதல் நாட்கள் தங்க வேண்டும் என்பதற்காக மீண்டும் நீண்டகால அனுமதிக்கு விண்ணப்பித்துள்ளார்.அவர் சிங்கப்பூரில் வேலை செய்ததை மறைத்து மூன்று ஆண்டுகள் வேலை செய்யவில்லை என்ற போலியான ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார்.

அதிகாரிகள் அவரின் ஆவணங்களை சரிபார்த்த போது அவைகள் போலியானவை என்பதை கண்டறிந்தனர். அதனைக் கண்டறிந்ததும் காவல்துறையிடம் புகார் அளித்தனர். அதன் பின், காவல்துறையிடம் அவர் பிடிபட்டார்.

அவர் மீது போலி ஆவணங்களை பயன்படுத்தி இன்னும் கூடுதல் நாட்கள் தங்க திட்டமிட்டதாக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. ஜூன் 1-ஆம் தேதி அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இம்மாதம் (ஜூன்) 1-ஆம் தேதி நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையில் சிக்கிய வெளிநாட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.