மஹா சிவராத்திரியில் எப்படி விரதத்தை கடைபிடிக்க வேண்டும்?

மஹா சிவராத்திரியில் எப்படி விரதத்தை கடைபிடிக்க வேண்டும்?

இந்த வருடம் மஹா சிவராத்திரி பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி புதன்கிழமை மாசி சதுர்த்தி அன்று கொண்டாடப்படுகிறது.

சிவராத்திரி விரதம் இருக்க விரும்புவோர் அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு பஞ்சாக்ஷர மந்திரம் கூறி சிவபெருமானை வணங்க வேண்டும்.

சிவலிங்கத்திற்கு வில்வ இலை மற்றும் பழங்கள் வைத்து வழிபட வேண்டும்.

மேலும் காலை, மாலை,இரவு என மூன்று வேளையும் உணவு உண்ணாமல் நான்கு சாம பூஜைகளில் கலந்துகொண்டு விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.

சிவராத்திரியில் நான்கு கால பூஜைகள் நடைபெறும்.

1) பிரம்மதேவன் சிவபெருமானை வணங்கும் நேரம் முதல் கால பூஜை.

2) விஷ்ணு பகவான் சிவபெருமானை வழிபடும் நேரம் இரண்டாம் கால பூஜை.

3) அம்பாள் சிவபெருமானை வழிபடும் நேரம் மூன்றாம் கால பூஜை.

4)உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் சிவபெருமானை வழிபடும் நேரம் நான்காம் கால பூஜை ஆகும்.

மேலும் எந்த வரம் கேட்டாலும் சிவபெருமான் படியளக்கும் நேரமும் இது தான்.

இப்படி சிவராத்திரி முழுவதும் கண்விழித்து நான்கு ஜாம பூஜைகளிலும் பங்கெடுத்துக் கொண்டால் அனைத்து கடவுள்களையும் வழிபட்டதற்கான அருள் உங்களுக்கு கிடைக்கும் என்று கூறுகின்றனர்.

மறுநாள் காலையில் ஏழை மக்களுக்கு அன்னதானம் வழங்கி சிவபெருமானுக்கு படைத்த பிரசாதத்தை சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.