சிங்கப்பூருக்கு டூரிஸ்ட் விசாவில் சென்று வேலைத் தேடலாமா? அதற்கான பதில் இதோ!!

சிங்கப்பூருக்கு டூரிஸ்ட் விசாவில் சென்று வேலைத் தேடலாமா? அதற்கான பதில் இதோ!!

சிங்கப்பூருக்கு டூரிஸ்ட் விசாவில் எப்படி செல்லலாம் என்பதைப் பற்றி இப்பதிவில் காண்போம் :

டூரிஸ்ட் விசாவில் சிங்கப்பூருக்கு செல்வோர் சுற்றிப் பார்க்க மட்டும்தான் செல்ல வேண்டும்.

டூரிஸ்ட் விசாவில் சென்று வேலை தேடலாம் என்ற எண்ணம் உங்களிடம் இருந்தால் அதை கைவிட்டு விடுவது நல்லது.

ஏனென்றால் டூரிஸ்ட் விசாவில் வேலை தேடுவது என்பது சிங்கப்பூர் சட்டத்தின்படி குற்றமாகும்.

நீங்கள் ஏர்போர்ட்டிற்கு சென்ற பிறகு சிங்கப்பூருக்கு வேலைத் தேடுவதற்காக தான் செல்கிறீர்கள் என்பதை கண்டறிந்தால் உங்களை டி-போர்ட் செய்து விடுவார்கள்.

டி-போர்ட் செய்துவிட்டால் நீங்கள் 14 ஏ படிவத்தை ஒப்படைத்த பிறகே சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதி வழங்குவார்கள்.அந்த முறை மிகவும் கடினமானது.

டூரிஸ்ட் விசாவில் இரண்டு விதம் உள்ளது.

1)சிங்கப்பூருக்கு சுற்றிப் பார்ப்பதற்காக செல்வோர்

2)சிங்கப்பூரில் உறவினர்களை பார்க்க செல்வோர்

சிங்கப்பூரில் டூரிஸ்ட் விசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டுமென்றால் ICA- இல் விண்ணப்பிக்க வேண்டும்.ICA – இல் விண்ணப்பிப்பதற்கு சிங்கப்பூர் சிட்டிஸன்ஷிப் உள்ளவர்கள் அல்லது PR உங்களுக்கு ஸ்பான்சர்ஷிப் கொடுக்க வேண்டும்.

அல்லது டிராவல்ஸ் மூலமாக டூரிஸ்ட் விசாவுக்கு விண்ணப்பிக்கலாம்.டிராவல்ஸ் மூலம் செல்லும்போது செலவு அதிகம்.

இதே நீங்கள் ஸ்பான்சர்ஷிப் மூலமாக சிங்கப்பூருக்கு வந்தால் செலவு குறைவு
. அதனால் ஸ்பான்ஸர்ஷிப் மூலமாக சிங்கப்பூருக்கு வருவது நல்லது.

சிங்கப்பூரில் PR அல்லது சிங்கப்பூர் குடியுரிமை உள்ளவர்கள் யாராவது தெரிந்தவர்கள் இருந்தால் அவர்களிடம் ஸ்பான்ஸர்ஷிப் கேட்டு பாருங்கள்.

டூரிஸ்ட் விசாவில் செல்வதற்கு எவ்வளவு செலவாகும் :

ஸ்பான்ஸர்ஷிப் மூலமாக விண்ணப்பித்தால் வெறும் $30 முதல் $40 டாலர் வரை மட்டுமே ஆகும்.

இந்தியாவில் டூரிஸ்ட் விசாவுக்கு விண்ணப்பித்தால் ₹5000 முதல் ₹15000 வரை செலவாகும்.

சிங்கப்பூரில் தேக்காவிலும் நிறைய டிராவல்ஸ் ஏஜென்சி உள்ளது.அங்கு விண்ணப்பித்தால் $50 முதல் $100 டாலர்கள் வரை செலவாகும்.

சிங்கப்பூரில் இருக்கும் லிட்டில் இந்தியாவில் உள்ள டிராவல்ஸ் ஏஜென்சியிலும் விண்ணப்பிக்கலாம்.

அவர்கள் கேட்கும் அனைத்து டாக்குமெண்ட்களையும் வழங்கினால் விண்ணப்பித்து கொடுப்பார்கள்.

டூரிஸ்ட் விசாவில் செல்லும்போது தேவையான டாக்குமெண்ட்களை மறந்து விடாமல் எடுத்து செல்ல வேண்டும்.

விண்ணப்பிக்கும் போது எந்த காரணத்தை குறிப்பிட்டு விண்ணப்பித்தார்கள் என்பதை உங்களுக்கு விண்ணப்பத்தவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

அதேபோல நீங்கள் ஸ்பான்ஸர்ஷிப் மூலமாக சென்றால் அவர்களின் பெயர் மற்றும் மொபைல் நம்பரையும் கையில் வைத்து கொள்ளுங்கள்.

திருமணமானவராக இருந்தால் அல்லது நீங்கள் சிங்கப்பூரில் கணவனையோ மனைவியையோ பார்க்க சென்றால் கல்யாணம் நடந்ததற்கான சர்டிபிகேட்டை எடுத்து செல்லுங்கள்.

ஏர்போர்ட்டில் உங்கள் மீது சந்தேகம் வந்தால் சோதனை செய்ய வாய்ப்புள்ளது.அவர்கள் கேட்கும் அனைத்து டாக்குமெண்ட்களையும் சரியாக வைத்திருந்தால் உங்களை டி-போர்ட் செய்ய வாய்ப்பில்லை.

டூரிஸ்ட் விசாவில் மூலம் சென்றால் எத்தனை மாதம் வரை சிங்கப்பூரில் இருக்கலாம் :

டூரிஸ்ட் விசாவில் சென்றால் ஒரு மாதம் மட்டுமே சிங்கப்பூரில் இருக்க அனுமதிப்பார்கள்.அதற்கு மேல் நீங்கள் அங்கு இருக்க வேண்டும் என்று ஆசைபட்டால் கூடுதலாக ஒரு மாதம் நீட்டித்துக் கொள்ளலாம்.
டூரிஸ்ட் விசாவில் அதற்கான Expiry Date இருக்கும். சிங்கப்பூருக்கு நீங்கள் எந்த நாள் வருகிறீர்களோ அந்த நாளிருந்து 30 நாட்கள் முடிவுதற்கு 7 முதல் 10 நாட்களுக்குள் முன் புதுப்பித்து மீண்டும் ஒரு மாதம் இருக்கலாம். உங்களுக்கு விசா புதுப்பிக்க முடியவில்லை என்றால், ஒரு நாள் முன்பே கிளம்பி விடுவது நல்லது.

Follow us on : click here 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan