உங்களுடைய இந்தியா டிரைவிங் லைசென்ஸை சிங்கப்பூர் லைசென்ஸாக மாற்ற வேண்டுமா?

உங்களுடைய இந்தியா டிரைவிங் லைசென்ஸை சிங்கப்பூர் லைசென்ஸாக மாற்ற வேண்டுமா?

சிங்கப்பூர் சென்றவுடன் நாம் நம்முடைய திறமையை மேலும் மேம்படுத்தவும்,நம் சம்பளத்தை மேலும் உயர்த்த பல வழிகள் உள்ளன. ஓர் உதாரணமாக டெஸ்ட் அடிப்பது, Forklift Operator License எடுப்பது,டிரைவிங் லைசென்ஸ் எடுப்பது என பல விதமான கோர்ஸ்கள் உள்ளன. அதில் சிறந்த ஒன்று சிங்கப்பூர் டிரைவிங் லைசென்ஸ் எடுப்பது.சிங்கப்பூர் டிரைவிங் லைசென்ஸில் இரண்டு விதம் உள்ளது. ஒன்று நேரடியாக லைசென்ஸ் எடுப்பது. மற்றொன்று உங்களிடம் இருக்கும் டிரைவிங் லைசென்ஸை சிங்கப்பூர் டிரைவிங் லைசென்ஸாக மாற்றுவது.

நேரடியாக லைசன்ஸ் எடுப்பது :

சிங்கப்பூரில் நேரடியாக சென்று லைசென்ஸ் எடுப்பது. இந்தியாவில் நாம் நேரடியாக சென்று எடுப்பது போலவே சிங்கப்பூரிலும் நேரடியாக சென்று எடுக்கலாம்.

இந்தியா லைசென்ஸ்ஸை convert செய்வது எப்படி? :

உங்களிடம் இந்தியா டிரைவிங் லைசென்ஸ் இருந்தால் அதை சிங்கப்பூர் டிரைவிங் லைசென்ஸாக Convert செய்து கொள்ளலாம்.

ஒரு சிலருக்கு இதில் ஓர் குழப்பம் எழும்.அது என்னவென்றால் இந்தியா லைசென்ஸை மாற்றும் போது அதை அவர்களே வைத்து கொள்வார்களா?. அதை அவர்கள் வைத்து கொள்ள மாட்டார்கள் உங்களிடமே திருப்பி கொடுப்பார்கள்.

இந்தியா வந்த பிறகும் அதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்தியா டிரைவிங் லைசென்ஸை Convert செய்வதற்கு woodlands அல்லது Bukit batok ஆகிய இடங்களில் ஏதேனும் ஓர் இடத்திற்கு சென்று நீங்கள் அப்பாயிண்ட்மெண்ட் புக் செய்ய வேண்டும்.அவர்களின் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யலாம்.

பதிவு செய்தவுடன் உங்களுக்கான அப்பாயிண்ட்மெண்ட்தேதியில் நேரில் சென்று இந்தியா டிரைவிங் லைசென்ஸை Convert செய்ய வேண்டும் என்று நீங்கள் கூறினால் அதற்கான நடைமுறைகளை கூறுவார்கள்.

அதன்பின் உங்களுக்காக கிரியேட் செய்யப்படும் அக்கௌன்ட்டிற்கான கட்டணத்தை கேட்பார்கள்.

நேரடியாக லைசென்ஸ் எடுப்பதாக இருந்தால் இரண்டு தேர்வு நடைபெறும். ஆனால் டிரைவிங் லைசென்ஸை மாற்றுவதாக இருந்தால் ஒரு தேர்வு எழுதினால் போதுமானது.

அதில் நாம் தேர்ச்சி அடைந்த பிறகு pokkuvகாவல்துறையில் அப்பாயிண்ட்மெண்ட் பெற்று அவர்கள் தரும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.அங்கு செல்லும்போது அவர்கள் எடுத்து வரச் சொன்ன அனைத்து டாக்குமெண்ட்களையும் தவறாமல் எடுத்துச் செல்லுங்கள்.நீங்கள் பூர்த்தி செய்தபின் உங்களின் டிரைவிங் லைசென்ஸை Convert செய்து கொடுப்பார்கள்.

ஒரு சிலர் பெரும்பாலும் செய்யும் தவறு,
பாஸ்போர்ட்டில் குறிப்பிட்டிருக்கும் முகவரி, டிரைவிங் லைசென்ஸில் இருக்கும் முகவரி ஒரே மாதிரி இல்லாமல் இருந்தால் convert செய்ய முடியாது.

நேரடியான டிரைவிங் லைசென்ஸ் எடுப்பதற்கு பணம் அதிகமாக செலவாகும். இந்தியா டிரைவிங் லைசென்ஸை Convert செய்வதற்கு குறைவாக செலவாகும்.

நேரடியாகவே சென்று லைசன்ஸ் எடுப்பதே நல்லது.

இந்தியா டிரைவிங் லைசென்ஸில் ஒட்டப் பட்டிருக்கும் கலர் ஸ்டிக்கர் சரியாக இல்லை என்றாலும் அல்லது ஏதேனும் பிழை இருந்தாலோ Embassy இல் letter வாங்கி வாருங்கள் என்று கூறுவார்கள்.

இந்தியா டிரைவிங் லைசென்ஸை மாற்றுவதற்கு தேவைப்படும் ஆவணங்களை விட நீங்கள் நேரடியாக சென்று டிரைவிங் லைசென்ஸ் எடுப்பதற்கு தேவைப்படும் ஆவணங்கள் குறைவு.

யாரெல்லாம் டிரைவிங் லைசென்ஸை Convert செய்யலாம் :

நீங்கள் வேலை செய்யும் கம்பெனியில் பாஸ்போர்ட் கொடுக்க மாட்டார்களா.நீங்கள் convert செய்ய இயலாது. அதற்கு பதிலாக நேரடியாக சென்று டிரைவிங் லைசென்ஸ் எடுக்கலாம்.

உங்களுடைய இந்தியா டிரைவிங் லைசென்ஸ் அல்லது பாஸ்போர்ட்டில் ஏதேனும் ஓர் பிழை இருந்தால் டிரைவிங் லைசென்ஸை convert செய்ய முடியாது.