ஜிம்மில் நேர்ந்த சோகச் சம்பவம்..!!! 17 வயது பழுதூக்கும் வீராங்கனை உயிரிழப்பு..!!!

ஜிம்மில் நேர்ந்த சோகச் சம்பவம்..!!! 17 வயது பழுதூக்கும் வீராங்கனை உயிரிழப்பு..!!!

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பளுதூக்கும் வீராங்கனை பயிற்சியின் போது உயிரிழந்தச் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பளு தூக்கும் வீராங்கனையான 17 வயதான யாஷ்திகா ஆச்சார்யாவின் கழுத்தில் 270 கிலோ கம்பி விழுந்தது.

இந்த விபத்தில் அவரது கழுத்து எலும்பு முறிந்தது.

மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஆச்சாரியாவைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

அவரது பயிற்றுவிப்பாளரும் சிறிய காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து ஆச்சாரியாவின் பெற்றோர் போலீசில் புகார் செய்யவில்லை.

ஆச்சாரியாவின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.