பிரசவ தழும்புகளால் கவலையா..??? இதோ உங்களுக்கான டிப்ஸ்..!!!

பிரசவ தழும்புகளால் கவலையா..??? இதோ உங்களுக்கான டிப்ஸ்..!!!

ஆண் பெண் இரு பாலருக்கும் சரும பிரச்சனைகளில் மிகவும் சவாலாக பார்க்கப்படுவது தழும்புகள். இதை போக்க வைப்பது அவ்வளவு எளிதான காரியமில்லை. இதற்காக சிலர் ஆயிரக்கணக்கில் செலவு செய்தும் எந்த ஒரு முன்னேற்றமும் இருக்காது. இதிலும் குறிப்பாக பிரசவ காலங்களில் ஏற்படும் தழும்புகள் மற்றும் உடல் அதிகரிப்பினால் தோள்பட்டை,கழுத்து மற்றும் தொடை போன்ற பகுதிகளில் ஏற்படும் தழும்புகள் போன்றவை மாறாமல் நீண்ட நாள் அப்படியே இருக்கும். இது போன்ற தழும்புகளை நாம் இயற்கையான பொருட்களை வைத்தே போக்கச் செய்யலாம்.

பாதாம் எண்ணெய்

பாதாம் எண்ணெய் மற்றும் சர்க்கரையை சம அளவு எடுத்து ஒன்றாக கலக்கவும். இந்தக் கலவையை தழும்புகள் உள்ள இடத்தில் தடவி சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால், தழும்புகள் படிப்படியாக மறையும். இதை வாரத்திற்கு 2 அல்லது 3 முறை செய்யவும்.

விளக்கெண்ணெய்

விளக்கெண்ணை பிரசவ தழும்புகள் மற்றும் தசை விரிவு போன்றவற்றை நீக்கும் திறன் உள்ளது. இதனை வயிறு, தோள்பட்டை மற்றும் தழும்புகள் உள்ள பகுதிகளில் தடவி வந்தால் எளிதில் மறைந்துவிடும்.

கற்றாழை ஜெல்

கற்றாழை சருமத்தை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.எனவே தினமும் குளித்த பிறகு தழும்புகள் உள்ள இடத்தில் தடவினால்,அது சீக்கிரம் மறைந்துவிடும்

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெயை சருமத்தில் தொடர்ந்து தடவுவது பல ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும். தேங்காய் எண்ணெயை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து பின் தண்ணீரில் கழுவவும்.