Singapore news

சிங்கப்பூர் S Pass/E Pass/Work Permit அப்ளை பண்ணியாச்சா இல்லையானு MOM Website இல் பார்ப்பது எப்படி?

சிங்கப்பூர் செல்ல வேண்டும் என்பது பலரது கனவு. சிங்கப்பூர் வேலைக்கு செல்வதற்கு ஏஜென்ட்டிடம் நமக்கு தகுதியான வேலையைத் தேர்ந்தெடுத்து அதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபடுவோம்.

நாம் எந்த வேலைக்காக செல்ல இருக்கிறோமோ அந்த வேலைக்கு அப்ளை செய்தார்களா? இல்லையா?என்பதை எப்படி சரிப்பார்ப்பது? எதில் பார்க்க வேண்டும்? என்பதைப் பற்றி தெளிவாக தெரிந்து கொள்வோம்.

ஒரு சிலர் அப்ளை செய்துவிட்டோம், முன்பணம் கட்டுங்கள் என்று கூறுவார்கள்.ஆனால், அவர்கள் அப்ளை செய்தார்களா? இல்லையா?என்பது நமக்கு தெரியாது. அவர்கள் கூறியது உண்மை என்று பணத்தைக் கொடுத்து விடுவோம். அவர்கள் நம்மிடம் இத்தனை நாட்கள் காத்திருங்கள் என்று கூறுவார்கள். ஆனால்,அவர்கள் கூறிய நாட்களை விட தாண்டி விடும்.கடைசியில் தான் நமக்கு அவர்கள் அப்ளைச் செய்யவில்லை என்பதே தெரியவரும்.

நீங்களும் ஏமாறாமல் உங்களுக்கு அப்ளைச் செய்துள்ளார்களா?இல்லையா?என்பதை நீங்களே உங்களுடைய மொபைலில் தெரிந்து கொள்ளலாம்.

இது போன்ற முக்கியமான தகவல்கள் பற்றி தெரிந்து கொள்ள “sgtamilan´´ இணைய பக்கத்தில் இணைந்திருங்கள்.

முதலில், உங்கள் மொபைலில் www.mom.gov.sg என்ற இணைய தளத்தை open செய்ய வேண்டும்.

Check Work Pass and Application Status என்ற பக்கம் இருக்கும்.அதில் Check Work Pass and Application Status என்பதை கிளிக் செய்யவும்.

அதன்பின், Select Your Language என்ற பக்கம் வரும்.அதில் 5 மொழிகள் இடம்பெற்றிருக்கும். உங்களுக்கு எந்த மொழியில் வேண்டுமோ, அதனை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அதில் தமிழ் மொழியும் அடங்கும்.

மொழியை தேர்ந்தெடுத்த பின் , I Want To Check என்ற பக்கம் வரும். அதில் Pass status, Salary என்று இருக்கும். Pass Status என்பதை கிளிக் செய்து Start என்று இருப்பதை கிளிக் செய்ய வேண்டும்.

அதன்பிறகு, வரும் பக்கத்தில் உங்களுடைய பிறந்த தேதியை குறிப்பிடவும்.Passport Number அல்லது Foreign Identification Number (FIN) என்று இருக்கும். அதில் ஏதேனும் ஒன்றை கிளிக் செய்ய வேண்டும்.

Passport Number என்பதை நீங்கள் கிளிக் செய்தால் உங்களுடைய Passport Number கொடுக்க வேண்டும். அதன்பின், I’m not robot என்பதற்கு tick கொடுக்க வேண்டும்.அதன்பிறகு, Submit என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

அடுத்த பக்கத்திற்கு செல்லும். அதில், Record Found, Valid என்று Green கலரில் இருக்கும். அதே பக்கத்தை Scroll செய்தால் Pass type, Expiry Date அதாவது உங்களுடைய Passport- இன் Expiry Date என்ற விவரங்கள் பற்றி குறிப்பிட்டிருக்கும்.

உங்களுக்கு அப்ளைச் செய்திருந்தால் மட்டுமே Record Found என்று வரும். அப்ளைச் செய்யவில்லை என்றால் No Record என்று வரும்.

ஒரு சில நேரங்களில் உங்களுடைய விவரம் காட்டுவதற்கு தாமதமாகலாம். ஏனென்றால், வேலைக்கான நடவடிக்கைகளால் தாமதம் ஆக கூட வாய்ப்பு உள்ளது. அப்ளை செய்த நாளிலிருந்து மூன்று நாட்களுக்குள் வெப்சைட்டில் விவரங்கள் வந்துவிடும்.

Pending, Approved என்று இல்லையென்றால் உங்களுக்கு அப்ளை செய்யவில்லை என்று அர்த்தம்.

Pending, Approved என்று உங்களுக்கு காண்பிக்கவில்லை என்றால்,நீங்கள் யார் மூலம் சிங்கப்பூருக்கு செல்ல உள்ளீர்களோ அவர்களிடம் அப்ளை செய்தார்களா? இல்லையா? என்பதை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

MOM Website Link ⬇️⬇️⬇️

https://www.mom.gov.sg/eservices/services/check-work-pass-and-application-status: சிங்கப்பூர் S Pass/E Pass/Work Permit அப்ளை பண்ணியாச்சா இல்லையானு MOM Website இல் பார்ப்பது எப்படி?