ரஜினிக்காக தனது படத்தின் பெயரை மாற்றிய முருகதாஸ்…!!!

ரஜினிக்காக தனது படத்தின் பெயரை மாற்றிய முருகதாஸ்...!!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக உயர்ந்து வருபவர் சிவகார்த்திகேயன். இவரின் நடிப்பில் வெளிவந்த அமரன் படம் இவருக்கு மாபெரும் வெற்றியை தந்தது.அமரன் படத்திற்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி மற்றும் சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

அமரன் படத்தின் வெற்றியால் இந்த இரண்டு படங்களுக்கும் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.

சமீபத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திற்கு மதராஸி என்று பெயரிடப்பட்டது.இது ஏற்கனவே அர்ஜுன் நடித்த படத்தின் தலைப்பு. ஆனால் அவர்களின் கதைக்கு ஏற்றதால் இந்த தலைப்பை கேட்டுள்ளனர்.

அதே சமயம் இந்த டைட்டிலை வைப்பதற்கு முன்பே தங்களது படத்திற்கு ஹண்ட்டர் என ஆங்கிலத்தில் டைட்டில் வைக்க திட்டமிட்டுள்ளனர். ஆனால் அந்த நேரத்தில் தான் ரஜினிகாந்த் நடித்த படத்திற்கு வேட்டையன் என்று டைட்டில் வைக்கப்பட்டு அந்த படமும் வெளியானது.

அதன்பிறகு அதே அர்த்தத்தில் ஹண்ட்டர் என்ற டைட்டிலில் படம் வெளியானால் அது ரஜினிகாந்துக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் என்பதாலும் இருவரும் ரஜினிகாந்த் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ள காரணத்தாலும் இந்தப் படத்தின் தலைப்பை மாற்ற முடிவு செய்ததாக கூறப்படுகிறது.மேலும் இந்த கதைக்கு மதராஸி என்ற டைட்டில் பொருத்தமாக இருந்ததால் அதையே வைக்க முடிவு செய்ததாக கூறப்படுகிறது.