இந்தியாவின் மசாலா ஆம்லேட்டுக்கு கிடைத்த அங்கீகாரம்..!!!

இந்தியாவின் மசாலா ஆம்லேட்டுக்கு கிடைத்த அங்கீகாரம்..!!!

நாம் அனைவரும் விரும்பி சாப்பிடும் ஆம்லெட் முதல் இனிப்புகள் வரை பலவகையான உணவுகளில் முட்டை பயன்படுத்தப்படுகிறது.

உணவு மற்றும் பயண வழிகாட்டி இணையதளமான டேஸ்ட்அட்லஸ் உலகின் முதல் 100 முட்டை உணவுகளை பட்டியலிட்டுள்ளது.

இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பது ஜப்பானில் தயாரிக்கப்படும் அஜிட்சுகே டமாகோ என்ற முட்டை உணவாகும்.

2வது இடத்தில் ஃபிலிப்பைன்ஸ் உணவான டோர்டாங் டலாங் உள்ளது.

கிரீஸைச் சேர்ந்த ஸ்டாகா மீ அய்கா மூன்றாவது இடத்தில் இருப்பதாக NDTV உணவு இணையதளம் கூறுகிறது.

முதல் 50 உணவு வகைகளின் பட்டியலில் இந்தியாவின் மசாலா ஆம்லெட்டும் இடம்பெற்றுள்ளது.

அது உணவு பட்டியலில் 22வது இடத்தைப் பெற்றுள்ளது.

வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி இலைகள், மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து சமைக்கப்பட்ட மசாலா ஆம்லெட் தெருக் கடைகளில் இருந்து பெரிய உணவகங்கள் வரை விற்கப்படுகின்றன.

இந்தியாவில் மசாலா ஆம்லெட்டை விரும்பாத உணவுப் பிரியர்களே இருக்க மாட்டார்கள் என்று சொல்லலாம்.