இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் கோர ரயில் விபத்து.இந்த விபத்தில் சுமார் 280 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. பலர் இந்த விபத்தில் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து நேற்று (ஜூன் 2) இரவு ஏழு மணியளவில் Balashore பஹானாகா ரயில் நிலையத்தில் நடந்ததாக கூறப்படுகிறது.
கொல்கத்தாவிலிருந்து சென்னை நோக்கி கோரமண்டல விரைவு ரயில் புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. அப்போது அதன் பெட்டிகள் தடம் புரண்டன.எதிரே இருந்த தண்டவாளத்து பெட்டிகள் சரிந்தன.
அப்போது பெங்களூரிலிருந்து ஹவுராவுக்கு பயணம் செய்த அதிவிரைவு ரயில் தண்டவாளத்தில் சரிந்து கிடந்த பெட்டிகள் மீது மோதியது.
சம்பவ இடத்தில் சரக்கு ரயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகவும் அதுவும் அந்த விபத்தில் சிக்கியதாக அதிகாரிகள் கூறினர்.
மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் பலரும் தங்களின் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.