எலான் மஸ்க்(Elon Musk) மீண்டும் உலகப் பணக்காரர் பெருமையைப் பெற்றுள்ளார்.
அவரது Tesla எலக்ட்ரிக் கார் நிறுவனத்தின் மதிப்பு அதிகரித்தது, அவரது சொத்து மதிப்பும் 192 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.
இவ்வாண்டு ஜனவரி மாதம் அவரது சொத்து மதிப்பு 55.3 பில்லியனாக இருந்தது.
சொகுசுப் பொருள் நிறுவனமான LVHM இன் தலைவர் Bernard Arnault முதலிடத்தில் இருந்தார். தற்போது அவரின் சொத்து மதிப்பு 24.5 பில்லியன் டாலரிலிருந்து 187 பில்லியன் டாலராக சரிந்ததாக Bloomberg’s Billionaires Index தெரிவித்தது.
Jeff Bezos மூன்றாவது இடத்தில் உள்ளார்.Bill Gates நான்காவது இடத்தில் உள்ளார்.
ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக மஸ்க் பொறுப்பேற்றதிலிருந்து Tesla பங்கு விலைகள் பெரிய அளவில் சரிந்தது.
ட்விட்டர் பொறுப்புகள் அவரது தலைமைத்துவத்தைப் பாதிப்பதாக சொல்லப்பட்டது. அதற்கு காரணமாகவும் கூறப்பட்டது.
முதலீட்டாளர்களின் கவலை தணிந்ததால் Tesla பங்கு விலைகளின் விழுக்காடு உயர்ந்துள்ளது. தற்போது 92 விழுக்காடு உயர்ந்துள்ளன.