நீங்க பண்ணது சரிதான்னா...நாங்க பண்ணதும் சரிதான்... பாகிஸ்தான் விளக்கம்..!!

இந்தியா, ஆப்கானிஸ்தான்,பாகிஸ்தான், ஆஸ்திரேலியா,தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, வங்கதேசம் ஆகிய எட்டு அணிகள் பங்கேற்கும் சாம்பியன் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற உள்ளது.
இதில் இந்திய அணிகள் பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் பிப்ரவரி 19 முதல் மார்ச் 1 வரை நடைபெறுகிறது.பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் இந்திய அணிக்கான போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கராச்சியில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த மைதானத்தில் இந்தியாவை தவிர மற்ற ஏழு நாடுகளின் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.இந்தியாவின் தேசியக் கொடி பறக்க விடப்படாதது குறித்த காணொளி ஆனது வெளியாகி அது சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில்,கராச்சி மைதானத்தில் இந்திய தேசியக் கொடி ஏன் பறக்கவில்லை என்பது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் பதிவிட்டுள்ளார்.
அவர், “இந்திய அணி சில காரணங்களுக்காக எங்கள் நாட்டிற்கு வர முடியாது என்று கூறி இங்கு வந்து விளையாடுவதை தவிர்த்து விட்டது. அதனால் இங்கு வந்து விளையாடப் போகும் நாடுகளின் கொடிகளை மட்டும் ஏற்றியுள்ளோம்” என்று பதிவிட்டிருந்தார்.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan