இம்மாதம் சிங்கப்பூரில் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளது.அது செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும்.
இந்த மாதம் முற்பகுதியில் காற்று அதிகம் இருக்காது.
இம்மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் அதிகாலை நேரங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.பலத்த காற்றையும் எதிர்பார்க்கக்கூடும்.
பிற்பகலில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.மாதத்தின் முற்பகுதியில் மொத்தமழைப் பொழிவு சராசரி அளவை தொடக் கூடும்.
தினசரி வெப்பநிலை 33 லிருந்து 34 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.வெப்பநிலை சில நாட்களில் 35 டிகிரி செல்சியசைத் தொடக்கூடும்.
வெப்பமும், ஈரப்பதமும் இரவில் அதிகமாக இருக்கும்.இரவில் வெப்பநிலை 29 டிகிரி செல்சியசுக்கும் மேல் அதிகரிக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.