படப்பிடிப்பு தளத்தில் பிரச்சனை செய்த கும்பல்…!!! ஓட விட்டு விரட்டிய நடிகர் விஜயகாந்த்…!!!

படப்பிடிப்பு தளத்தில் பிரச்சனை செய்த கும்பல்...!!! ஓட விட்டு விரட்டிய நடிகர் விஜயகாந்த்...!!!

கேப்டன் விஜயகாந்த் மறைந்தாலும் அவரது நல்ல குணத்தால் பல நடிகர்கள் இன்று வரை அவரை மறக்காமல் பேசி வருகின்றனர்.

அந்த வகையில், நடிகர் ராம்கி விஜயகாந்துடன் செந்தூரப்பூவே படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது,நடிகரை வம்பு செய்துவிட்டு ஓடிய கும்பலைத் தனியாளாக அடித்து ஓடவிட்ட சம்பவம் குறித்துப் பேசியுள்ளார். அவர் அளித்த இந்த பேட்டியின் காணொளி தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது.

நடிகர் ராம்கி indiaglitz.com என்ற யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், நானும் விஜயகாந்தும் செந்தூரப்பூவே படப்பிடிப்பில் நடித்துக் கொண்டிருந்தோம்.அப்போது திடீரென 4 பேர் குடிபோதையில் அங்கு வந்து மணலில் படுத்திருந்த 2 நடிகர்களை சீண்டி வம்பு இழுத்து வரம்பு மீறி பேசிக் கொண்டிருந்தனர்.விஜயகாந்த் இதை முதலில் கண்டுகொள்ளாமல் பொறுமையாக இருந்தார். திடீரென அந்த நபரை பளார் என அறைந்து விட்டார்.

இதனால் படப்பிடிப்பு தளத்தில் பிரச்சனை ஏற்பட்டு இறுதியில் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. பின்னர் படப்பிடிப்பில் இருந்த அனைவரும் அவரை சமாதானம் செய்த பிறகு பிரச்சனை செய்த நபர்கள் அங்கிருந்து ஓடிவிட்டனர்.இருபது நிமிடங்களுக்குப் பிறகு ஓடிப்போன அந்த நபர் ஆட்களைத் திரட்டி, படப்பிடிப்பு தளத்தில் இருந்த விளக்குகளை ஒவ்வொன்றாக கற்கள் மற்றும் கம்பிகளால் அடித்து நொறுக்கினார். அங்கிருந்த கார் மீது தொடர்ந்து கற்களை வீசிக்கொண்டே இருந்தார்.

இதைக் கண்டு நாங்கள் அனைவரும் ஒரு கணம் பயந்தோம்.யாருக்கும் என்ன செய்வது என்றே தெரியவில்லை. அப்போது கேப்டன் விஜயகாந்த் சார் அங்கிருந்து பல்பை உருவி வாங்கடா என்பது போல் வீசினார்.படப்பிடிப்பில் இருந்த அனைவரும் அவரைத் தடுக்க முயன்றனர்.ஆனால் யாராலும் அவரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. படப்பிடிப்பில் நடந்த உண்மையான சண்டையைப் பார்த்த நான் அப்படியே ஆடிப் போயிட்டேன் என்று கூறினார்.

யாருடைய உதவிக்கும் அவர் காத்திருக்கவில்லை. தனி ஆளாக இறங்கி மொத்த கூட்டத்தையும் அடித்தார். பின்னர் அங்கிருந்த பெண்கள் அனைவரையும் வண்டியில் ஏற்றி பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைத்தார்.அதன்பின், அவர்களை விரட்டி விரட்டி அடித்தார்.அதற்குள் இந்த விஷயம் ராதா ரவிக்கு தெரிந்ததும் உடனே அவர் கிளம்பி வந்து அந்த
கும்பலிடம் பஞ்சாயத்து செய்தார் என்று கூறினார்.

தற்போது இந்த காணொளியானது வைரலாகி ரசிகர்கள் விஜயகாந்தின் உண்மையான தைரியத்தை நினைத்து பாராட்டி வருகின்றனர்.