சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடுவாரா ரிஷப் பண்ட்..??? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!!

இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக துபாய் சென்று அங்கு பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் 19ம் தேதி பாகிஸ்தான் மற்றும் துபாயில் ஹைபிரிட் மாடலில் நடக்கிறது. இந்த தொடருக்காக இந்திய அணி தற்போது துபாயில் உள்ள ஐசிசி கிரிக்கெட் அகாடமியில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் 20ம் தேதி வங்கதேசத்தை எதிர்கொள்கிறது.
இந்நிலையில், நேற்று பயிற்சியின் போது ஹர்திக் பாண்டியா பேட்டிங் செய்து கொண்டிருந்தார்.
அப்போது ஹர்திக் அடித்த பந்து களத்தில் நின்றிருந்த இந்தியாவின் சுறுசுறுப்பான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் மீது தாக்கியது. பந்து ரிஷப் பண்ட் காலில் பட்டது.அவர் வலியால் துடித்தபடி தரையில் சரிந்தார்.
இதையடுத்து ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட மற்ற வீரர்கள் ஓடி வந்து ரிஷப் பண்டை பார்த்தனர். உடனடியாக அங்கு விரைந்த இந்திய அணியின் மருத்துவக் குழுவினர் ஐஸ் கட்டிகளுடன் ரிஷப்பிற்கு முதலுதவி சிகிச்சை செய்தனர்.
அதன்பிறகு ரிஷப் பண்ட் நடக்க முடியாமல் தள்ளாடிக்கொண்டே பெவிலியன் சென்றார். இருப்பினும், அரை மணி நேரம் கழித்து, பண்ட் மீண்டும் பேட்டிங் செய்ய வந்தார். ஆனால் பின்னர் அவர் வலியால் அவதிப்பட்டார்.
இதனால் சாம்பியன் தொடரில் ரிஷப் இடம் பிடிப்பாரா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கே.எல் ராகுலை முதல் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக பயன்படுத்துவேன் என்று கம்பீர் ஏற்கனவே கூறியிருந்தார்.
கே.எல். ராகுலுக்கு பதில் மாற்று வீரராக களம் இறங்குபவர் ரிஷப் பண்ட் தான்..இந்நிலையில் தற்போது ரிஷப் பண்டிற்கு ஏற்பட்ட காயம் இந்திய ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.ஏற்கனவே பண்ட் கார் விபத்தில் சிக்கியதால் அவருக்கு காலில் பெரிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan