சர்க்கரை நோயாளிகள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்…!!!

சர்க்கரை நோயாளிகள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்...!!!

இன்றைய காலகட்டத்தில் நீரழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு நாம் எடுத்துக் கொள்ளும் உணவு பழக்க வழக்கங்கள், மன அழுத்தம் தூக்கமின்மை போன்ற பல்வேறு காரணங்கள் நீரிழிவு நோய்க்கு காரணமாக கூறப்படுகின்றன. எது எப்படி ஆயினும் சர்க்கரை நோய் வந்து விட்டால் கீழ்க்கண்ட 10 குறிப்புகளை தவறாமல் பின்பற்றும்படி மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

✨️ சர்க்கரை நோயை முழுவதுமாக குணப்படுத்த முடியாது என்பதால், மாத்திரை, ஊசி போட்டு வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.

✨️ சர்க்கரை நோயாளிகள் மாதம் ஒருமுறை ரத்தப் பரிசோதனை உள்ளிட்ட தேவையான பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.


✨️ சர்க்கரை நோயாளிகள் ஒரு போதும் சுய மருத்துவம் செய்யக் கூடாது. மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகே மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும்.

✨️காலை 4:30 முதல் 6:00 வரை தவறாமல் நடக்கவும்.

✨️ நீரிழிவு நோயாளிகள் கண்டிப்பாக மாவு சத்து அதிகம் உள்ள உணவுகளை தவிர்த்து நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

✨️ கீரைகளில் முருங்கைக் கீரை,அகத்தி கீரை, மணத்தக்காளி கீரை போன்றவற்றை அதிகம் சேர்க்க வேண்டும். சிறுநீரகப் பிரச்சனை இருந்தால் பாலக் கீரையை தவிர்க்கலாம்.


✨️ முக்கனியைத் தவிர கொய்யா, நாவல், பப்பாளி, அத்திப்பழம் ஆகியப் பழங்களை அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

✨️ சிறுதானியங்களை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

✨️ சர்க்கரை நோயாளிகளின் உணவுத் தட்டில் காய்கறிகள் மற்றும் பழங்கள் அதிகமாகவும் அரிசி குறைவாகவும் இருப்பது மிகவும் அவசியம்.

✨️ மாரடைப்பு மற்றும் உடல் பருமனை தடுக்க தினமும் இரண்டு பூண்டு துண்டுகளை உணவுடன் சேர்த்து சாப்பிடுங்கள். கொடிகளில் வளரக்கூடிய அனைத்து காய்கறிகளையும் சாப்பிடலாம்.

சித்த மருத்துவம் கூறும் மருத்துவ குறிப்புகள்:

👉 கேழ்வரகு கஞ்சி, கேழ்வரகு அடை போன்றவற்றை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

👉 தினமும் 4 முதல் 10 கிராம் அளவு ஆவாரம் பூ பொடியை வெந்நீரில் காய்ச்சி நன்கு வற்றிய பின் அருந்தலாம்.

👉1 கிராம் உலர்ந்த அத்திப்பழத்தை ஒரு நாளைக்கு இரண்டு வேளை தண்ணீருடன் எடுத்துக் கொள்ளலாம்.

👉 நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் 1-5 கிராம் கடல் அழிஞ்சில் உடன் 4 பங்கு தண்ணீரில் கலந்து ஒரு பங்கு வரும் வரை வற்ற வைத்து பின் அருந்தலாம்.


👉 தினமும் 1-3 கோவைக்காய் எடுத்து அதை ஜூஸாக குடிக்கலாம்.

👉 5 கிராம் ஆலம்பட்டி பொடியை 50 மில்லி தண்ணீரில் கலந்து ஒரு நாளைக்கு இரண்டு முறை (30 மில்லி முதல் 60 மில்லி வரை) குடிக்கவும்.


👉 2-4 கிராம் நாவல் கொட்டை பொடியை 50 மி.லி. வெந்நீரில் கலந்து ஒரு நாளைக்கு இரண்டு முறை குடிக்கவும்.

👉 மூங்கில் அரிசியை உணவாக எடுத்துக் கொள்ளலாம். இது இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது.


👉 கடுமையான தாகத்தைத் தணிக்க, சிந்திலின் இலைகள் அல்லது தண்டுப் பொடியை வெந்நீரில் ஊறவைத்து ஒரு நாளைக்கு இரண்டு முறை சாப்பிடலாம்.

👉 1 கிராம் தேரான் விதை பொடியை ஒரு நாளைக்கு இரண்டு முறை பாலுடன் சேர்த்து சாப்பிடலாம்.

👉 3 கிராம் கருஞ்சீரகப் பொடியை சம அளவு வெந்தயத்துடன் கலந்து ஒரு நாளைக்கு இரண்டு முறை உணவுக்கு முன் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை அளவு குறையும்.

Follow us on : click here ⏬

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan