அண்மையில் சிங்கப்பூரின் Pollisum Engineering நிறுவனம் நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது. தென்கொரியா `Squid Game´ நாடகத் தொடரை மையமாக அது நடத்தப்பட்டது.
போட்டியில் போட்டியாளர்கள் பல சவால்களைச் சந்திக்க வேண்டும். அதில் வெற்றிப் பெற வேண்டும்.
இப்போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த செல்வம் ஆறுமுகம் என்பவர் வெற்றிப்பெற்றார்.
அவர் அப்போட்டியில் அனைத்து விளையாட்டுகளிலும் போட்டியிட்டு வெற்றிப் பெற்றார்.
அவருக்கு பரிசுத்தொகையாக 18, 888 வெள்ளி வழங்கப்பட்டது.
வெற்றியாளராக அறிவித்த போது மேடையில் மண்டியிட்டு கண்ணீர் சிந்தும் காட்சி Tiktok இல் பகிரப்பட்டு வருகிறது.
அந்த பரிசுத்தொகை அவரின் 1.5 ஆண்டு சம்பளத்துக்குச் சமம் என்று சொல்லப்படுகிறது.
அந்த பரிசுத் தொகையின் மூலம் நிலத்தை வாங்கி இந்தியாவில் இருக்கும் அவரது குடும்பத்திற்கு வீடு கட்ட திட்டமிட்டுள்ளார்.
அவரைச் சார்ந்து 17 குடும்ப உறுப்பினர்கள் உள்ளதாக கூறினார்.பரிசுத்தொகை தனது நீண்டநாள் கனவை நிறைவேற்ற உதவும் என்றார்.