வெள்ளை முடி பிரச்சனையா..??? வீட்டிலேயே இயற்கையான ஹேர் டை செய்யலாம் வாங்க…!!

வெள்ளை முடி பிரச்சனையா..??? வீட்டிலேயே இயற்கையான ஹேர் டை செய்யலாம் வாங்க...!!

இன்றைய காலகட்டத்தில் இளைஞர்களுக்கு கூட வெள்ளை முடி வந்து விட்டது. வெள்ளை முடி என்றாலே வயதானவர்களுக்கு தான் என்ற நிலை மாறி இன்று இளைஞர்களுக்கும் இந்த பிரச்சனை வந்துவிட்டது. இதனால் கடைகளில் விற்கும் கண்ட கண்ட ஹேர்டைகளை வாங்கி உபயோகிக்கின்றனர். இவற்றை அதிக விலை கொடுத்து வாங்கினாலும் அதில் உள்ள சில கெமிக்கல்களால் சிலருக்கு முடி உதிர்தல் போன்ற பிரச்சனையால் வழுக்கை கூட ஏற்படுகின்றது. இதனால் சிலர் ஹேர் டைகளை வாங்கவே அச்சப்பட்டு வெள்ளை முடியுடன் சுற்றித்திரிகின்றனர். இந்த வெள்ளை முடியை வீட்டிலேயே உள்ள சில இயற்கையான பொருட்களை வைத்து எந்தவித செலவும் இல்லாமல் கருமையாக மாற்றலாம்.

தேவையான பொருட்கள்:-

1)கடுகு – இரண்டு டேபிள்ஸ்பூன்

2) சீரகம் – இரண்டு டீஸ்பூன்

3)கறிவேப்பிலை – சிறிதளவு

4) வெந்தயம் – இரண்டு தேக்கரண்டி

5) கடுகு எண்ணெய் – ஒரு தேக்கரண்டி

6) கற்றாழை ஜெல் – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

✨️ முதலில் ஒரு கைப்பிடி அளவு கறிவேப்பிலையை எடுத்து மிக்ஸி ஜாரில் போடவும்.

✨️ அடுத்து மிக்ஸி ஜாரில் இரண்டு டேபிள்ஸ்பூன் கடுகு, இரண்டு டேபிள்ஸ்பூன் சீரகம் போடவும்.


✨️ அதன் பிறகு இரண்டு தேக்கரண்டி கருஞ்சீரகத்தை அதில் போட வேண்டும்.பின்னர் இதை அரைத்து பொடியாக்கிக் கொள்ளவும்.

✨️ பிறகு அரைத்த கறிவேப்பிலை கலவையை அடுப்பில் வைத்து மிதமான தீயில் வதக்கவும்.

✨️ கலவை நன்கு கருகி வரும் வரை வறுத்த பிறகு, அடுப்பை அணைக்கவும்.


✨️ அடுத்து இந்தக் கலவையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி நன்றாக ஆறவிடவும்.அதன் பிறகு மிக்ஸி ஜாரில் போட்டு நைஸ் பவுடர் பதத்திற்கு அரைத்து ஈரம் இல்லாத பாத்திரத்தில் சேமித்து வைக்கவும்.

✨️ இந்தப் பொடியை இரண்டு தேக்கரண்டி எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் ஒரு டீஸ்பூன் கற்றாழை ஜெல் சேர்த்து கலக்கவும்.

✨️ அடுத்து,ஒரு தேக்கரண்டி கடுகு எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும். இந்த ஹேர் டையை தலை முழுவதும் முடியின் வேர்களில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

பிறகு மைல்டு ஷாம்பை பயன்படுத்தி தலைமுடியை அலசி சுத்தம் செய்தால் வெள்ளை முடி கருமையாக மாறும்.

Follow us on : click here ⏬

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan