அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்பைச் சந்தித்தார் பிரதமர் மோடி...!!!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அதிகாரத்துவ பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார்.
இன்று காலை மோடி, அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பை சந்திக்கும் முன் வாஷிங்டன் டிசிக்கு வந்திறங்கினார்.
அமெரிக்காவுக்கான இந்திய தூதர் வினய் மோகன் குவாத்ரா மற்றும் அதிகாரிகள் விமான நிலையத்தில் பிரதமர் மோடியை வரவேற்றனர்.
நாட்டின் 47வது அதிபராக அமெரிக்க தலைவர் பதவியேற்ற பிறகு, அதிபர் டிரம்பை சந்தித்த முதல் வெளிநாட்டு தலைவர்களில் மோடியும் ஒருவர்.
இரு நாட்டுத் தலைவர்களும் தொழில்நுட்பம், வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் எரிசக்தி போன்ற பல்வேறு துறைகள் குறித்து விவாதித்தனர்.
அமெரிக்காவும் இந்தியாவும் ஒரு விரிவான சர்வதேச மூலோபாய கூட்டுறவைக் கொண்டுள்ளன.
இந்தியாவுடன் நியாயமான வர்த்தக உறவுக்கு திரு.டிரம்ப் அழைப்பு விடுத்தார்.
அமெரிக்காவிடமிருந்து கூடுதல் பாதுகாப்பு உபகரணங்களை வாங்குமாறு புதுடில்லியைக் கேட்டுக் கொண்டார்.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan