Latest Singapore News

சிங்கப்பூரில் வேகக் கட்டுப்பாட்டை மீறி காரை ஓட்டிய பெண்!ஒருவர் மரணம்!

சிங்கப்பூரில் வேக கட்டுப்பாட்டை மீறி வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Mazda3 காரை 35 வயதுடைய பெண் ஓட்டினார். காரை இரண்டு மோட்டார் சைக்கிள்கள், ஒரு லாரி,ஒரு காருடன் மோதினார்.

இந்த விபத்தில் 31 வயதுடைய சைக்கிளோட்டி உயிரிழந்தார்.

மத்திய விரைவு சாலையில் எண்பது கிலோமீட்டர் கட்டுப்பாடு உள்ள பகுதியில் குறைந்தது மணிக்கு 118 கிலோமீட்டர் வேகத்தில் சென்றதாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது.

அவருக்கு இரண்டுரை ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அதோடு,பத்து மாதம் வாகனம் ஓட்டத் தடையும் விதிக்கப்பட்டது.