Singapore Airlines,Garuda Indonesia விமான நிறுவனங்கள் இணைந்து கூட்டுத் திட்டத்தைச் செயல்படுத்த தொடங்க உள்ளன. இந்தோனேஷியாவிற்கும்,சிங்கப்பூருக்கும் இடையில் கூடுதல் பயணிகளை ஏற்றிச் செல்லும் முயற்சியை அந்நிறுவனங்கள் மேற்கொள்ள உள்ளன.
கோவிட்-19 நோய்ப்பரவலுக்கு பிறகு தென்கிழக்காசியாவில் பயணத்துறை சூடுப்பிடித்துள்ளது.
இந்நிலையில், சேவைகளை ஒருங்கிணைத்து பயணிகளுக்குக் கூடுதல் வசதிகளை கொடுக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
“இந்தோனேஷியாவிலும்,சிங்கப்பூரிலும் விமான துறையை வளர்ப்பதே எங்கள் நோக்கம்.வியாபாரத்தை விரிவுப்படுத்துவதோடு மக்களிடையே தொடர்பை வளர்க்கவும் இந்த திட்டம் உறுதுணையாக இருக்கும்´´ என்று Singapore Airlines நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கூறினார்.