தனுஷ் படத்திற்கு சம்பளம் கூட வாங்காமல் தீயாய் வேலை செய்த ஜி.வி பிரகாஷ்..!!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். சமீபத்தில் வெளியான ராயன் படத்தின் வெற்றிக்கு பிறகு தனுஷ் இயக்கியுள்ள படம் தான் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் சம்பளமே இல்லாமல் இசையமைத்துள்ளார்.
தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் குட்டி நயன் அனிகா சுரேந்திரன் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் பிப்ரவரி 21ஆம் தேதி திரைக்கு வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் படத்தின் இயக்குனர் தனுஷ் கலந்து கொள்ளவில்லை. அவர் வேறொரு படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருந்ததால், அவரால் விழாவில் பங்கேற்க முடியவில்லை.
ஆனால், இயக்குநர்கள் செல்வராகவன், லப்பர் பந்து இயக்குநர் தமிழரசன் பச்சிமுத்து, போர் தொழில் பட இயக்குநர் விக்னேஷ் ராஜா, அமரன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார், இப்படத்திற்காக சம்பளம் வாங்காமல் உழைத்துள்ளேன். ஏற்கனவே இப்படத்தை பார்த்துவிட்டதாகவும், படம் கண்டிப்பாக ஹிட்டாகும் என்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ஜிவி பிரகாஷ், ரஜினியின் ஜெயிலர் படத்தின் வெற்றிக்குப் பிறகு இசையமைப்பாளருக்கு இயக்குநர் கார் கொடுத்ததைப் போல,இந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு தயாரிப்பாளர் எங்களுக்கு பரிசு வழங்குவார் என எதிர்பார்ப்பதாகக் கூறியுள்ளார்.
இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இயக்குநர் எஸ்.ஜே சூர்யாவும் தனுசை பாராட்டியுள்ளார். இப்படத்தில் இன்றைய கால இளைஞர்களின் மனநிலையை எதார்த்தமாக வெளிப்படுத்தியிருக்கிறார் என்றும் படம் நிச்சயம் ஹிட்டடிக்கும் என்றும் கூறியுள்ளார்.
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்திற்காக ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்த பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளன. குறிப்பாக படத்தின் முதல் சிங்கிளாக வெளியான கோல்டன் ஸ்பேரோ பாடல் யூடியூப்பில் வைரலானது மற்றும் 100 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றது.
இப்படி ஒரு சூப்பர் ஹிட் ஆல்பத்தைக் கொடுத்த ஜி.வி.பிரகாஷுக்கு இந்தப் படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான தனுஷ் பணம் கொடுக்காதது சற்று ஆச்சரியம்தான் உள்ளது.
FOLLOW US ON MORE :
Telegram id : https://t.me/sgnewsinfoo
Facebook id : https://www.facebook.com/profile.php?id=61571255376519&mibextid=ZbWKwL
Instagram id : https://www.instagram.com/sg_news_info/profilecard/?igsh=MWs2eWF0NmJoN3N4Mw==