South Bridge Road ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தின் முன்னாள் தலைமை அர்ச்சகர் கந்தசாமி சேனாதிபதி ஆலயத்தின் தங்க ஆபரணங்களை 2 மில்லியன் வெள்ளிக்கும் மேல் அடகு வைத்துள்ளார்.
சுமார் 5 ஆண்டுகளாக அதை த் தொடர்ந்து செய்து வந்துள்ளார்.
கோவிட்-19 நோய்ப்பரவல் காலக்கட்டத்தில் கணக்காய்வு தாமதமாக்கப்பட்டபோது நகைகளைக் காணவில்லை என்பது தெரியவந்தது.
அவருக்கு வயது 39. இன்று (மே-30) அவருக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இந்து அறக்கட்டளை வாரியம் (HEB) அவரை வேலைக்கு சேர்த்தது.கந்தசாமி இந்தியாவைச் சேர்ந்தவர்.
ஆலயத்தின் முன்னாள் தலைமை அர்ச்சகர் பதவிலிருந்து விலகியதால் அப்பதவியை கந்தசாமி ஏற்றுக்கொண்டார்.
அவருடைய பொறுப்பில் 1.1 மில்லியன் வெள்ளி மதிப்புள்ள 250 க்கும் அதிகமான தங்க ஆபரணங்கள் இருந்தன.
தங்க நகைகளை அடகு வைத்து,பணம் கிடைத்தவுடன் அவற்றை மீட்டெடுப்பதுதான் அவரது திட்டம்.
ஆனால்,கோவிட்-19 நோய்ப்பரவல் காலக்கட்டத்தின்போது, கோவிலில் நடைபெறும் சடங்குகளுக்கு நகைகளை மீட்டெடுக்க போதுமான பணத்தை அவரால் சேகரிக்க முடியவில்லை.
அவர் அடகு வைத்த நகைகள் அனைத்தையும் மீட்டு ஆலயத்திடம் திரும்ப ஒப்படைத்தார்.