இரங்கல்..!!! பிரபல நகைச்சுவை நடிகர் மோசஸ் லிம் காலமானார்...!!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரின் பிரபல உள்ளூர் நடிகரும் படைப்பாளருமான திரு.மோசஸ் லிம் நேற்று (பிப்ரவரி 11) காலமானார்.
அவருக்கு வயது 75.
இன்று காலை 8.30 மணியளவில் அவரின் அதிகாரப்பூர்வ மறைவு குறித்து அவரது முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டது.
சிங்கப்பூரர்களின் தலைமுறையினருக்கு முடிவில்லாத சிரிப்பையும் மகிழ்ச்சியையும் தந்த மோசஸ் லிம், தனது மறக்க முடியாத புன்னகையைப் போல பிரகாசிக்கும் ஒரு எதிர்காலத்தை விட்டுவிட்டுச் சென்றுள்ளார்.
சிங்கப்பூரின் முதல் ஆங்கிலத் தொலைக்காட்சி நகைச்சுவைத் தொடரான அண்டர் ஒன் ரூஃப்பில் நடித்ததன் மூலம் அவர் சிங்கப்பூரர்களின் இதயங்களை வென்றார்.
அவரின் தொலைக்காட்சி நகைச்சுவை தொடர் பார்வையாளர்களை ரசிக்க வைத்தது. இதன் மூலம் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர்.
அவரது மரணத்திற்கான காரணம் குறிப்பிடப்படவில்லை.
அவரின் இறப்பிற்கு ரசிகர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan