Latest Singapore News

சிங்கப்பூரில் அடுத்த 9 மாதங்களுக்கு கடுமையான வறட்சி!?

ஆசியானின் தென்பகுதி வட்டாரத்தில் அடுத்த மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை புகைமூட்டம் உருவாகும் அபாயம் உள்ளதாக தெரியவந்துள்ளது.

ஆசியான் சிறப்பு வானிலை ஆய்வு மையம் வறண்ட பருவநிலை தொடங்கும் என முதல்நிலை எச்சரிக்கை விடுத்துள்ளது.

சிங்கப்பூர்,இந்தோனேசியா,புருணை,மலேசியா,தாய்லாந்தின் தென்பகுதி ஆகிய இடங்களில் கடுமையான வறட்சி நீடிக்கலாம் என்று தெரிவித்தது.

EI Nino காலநிலை அப்பகுதியை நெருங்கி வருவதால் இவ்வாறு கூறப்படுகிறது.

EI Nino என்பது கடல்கள் மற்றும் வெப்ப மண்டலங்களில் வெப்பநிலை மாறுபாடுகளைத் தூண்டும் ஒரு இயற்கை நிகழ்வு.

இந்நிகழ்வு மூன்றிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏற்படும்.அது 9 மாதங்கள் வரை நீடிக்கும்.

இது கடல்களை வெப்பமாக்குகிறது மற்றும் நிலத்தில் வறட்சியை நீடிக்கிறது.