அட...!!! மரவள்ளிக்கிழங்கில் இவ்வளவு நன்மைகள் இருக்கா..!!

இயற்கையாகவே மண்ணில் விளையும் பொருள்களில் பல்வேறு நன்மைகள் நிறைந்துள்ளன. அப்படி நம் மண்ணில் விளையும் மரவள்ளிக்கிழங்கு,சர்க்கரை வள்ளிக் கிழங்கு, பனங்கிழங்கு போன்றவை பல நன்மைகளைத் தருகின்றன. இந்த கிழங்குகளில் இருந்து பல்வேறு நோய்களுக்கு மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.
இதில் மாவுச்சத்து நிறைந்த மரவள்ளிக்கிழங்கை உட்கொள்வதால் பல நன்மைகள் உள்ளன. இந்த கிழங்கில் உள்ள சத்துக்கள் பல நோய்களை குணப்படுத்த உதவுகிறது.
மரவள்ளிக்கிழங்கில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:
- கால்சியம்
- புரதம்
- இரும்புச்சத்து
- வைட்டமின் ஏ, பி2 மற்றும் சி
- பாஸ்பரஸ்
மரவள்ளிக் கிழங்கின் பயன்கள்:
- மரவள்ளிக் கிழங்கை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.
- மறதி நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மரவள்ளிக் கிழங்கை சாப்பிட்டு வந்தால் ஞாபகத்திறன் அதிகரிக்கும்.
- மரவள்ளிக் கிழங்கு உடலின் நீர் பற்றாக்குறையை சரி செய்கிறது.
- இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் திறன் கொண்டது.
- மரவள்ளிக் கிழங்குடன் பால் மற்றும் வெல்லம் சேர்த்துக் குடித்து வந்தால் உடல் பலம் பெறும்.
- எலும்பு தேய்மான பிரச்சனை உள்ளவர்கள் மரவள்ளிக் கிழங்கை மசித்து பாலுடன் கலந்து சாப்பிடலாம்.
- மரவள்ளிக் கிழங்கை வேகவைத்து சாப்பிட மூட்டு மற்றும் முழங்கால் வலி குணமாகும்.
- மரவள்ளிக் கிழங்கை வேகவைத்து சாப்பிட எலும்புகளுக்கு கால்சியம் கிடைக்கும்.
மரவள்ளிக்கிழங்கை யார் சாப்பிடக்கூடாது?
💠 சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் மரவள்ளிக் கிழங்கைச் சாப்பிடக் கூடாது.
💠 சிறுநீரக கல், சிறுநீரக தொற்று, சிறுநீர்ப்பை அழற்சி போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மரவள்ளிக்கிழங்கை சாப்பிடக்கூடாது.
💠 கல்லீரல் தொடர்பான பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்கள் மரவள்ளிக்கிழங்கை சாப்பிடக்கூடாது.
💠 மூளை பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மரவள்ளிக்கிழங்கைத் தவிர்க்க வேண்டும்.
💠 வயிறு சம்பந்தமான பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் மரவள்ளிக் கிழங்கு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.ஏனெனில் இது வயிற்று வலியை ஏற்படுத்தும்.
மரவள்ளிக்கிழங்கில் நன்மைகள் இருந்தாலும் இது போன்ற பிரச்சனைகள் இருப்பவர்கள் மரவள்ளிக் கிழங்கை தவிர்ப்பது நல்லது.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan