தென்கொரியா தொடக்கப் பள்ளி ஒன்றில் நடந்த கத்திக்குத்துச் சம்பவம்…!!!

தென்கொரியா தொடக்கப்பள்ளி ஒன்றில் நடந்த கத்திக்குத்துச் சம்பவம்...!!!

தென் கொரியாவின் டேஜியோனில் 7 வயது மாணவியைக் கொன்ற ஆசிரியர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் கொடூரச் சம்பவம் நேற்று (பிப்ரவரி 10) அங்குள்ள தொடக்கப்பள்ளி ஒன்றில் நடந்துள்ளது.

மாணவியின் கழுத்து மற்றும் முகத்தில் கத்திக்குத்து காயங்களுடன் காணப்பட்டதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.

பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்தில் 40 வயது மதிக்கத்தக்க பள்ளி ஆசிரியரும் கத்திக்குத்து காயங்களுடன் காணப்பட்டார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

மனச்சோர்வு காரணமாக மருத்துவ விடுப்பில் இருந்த அவர்,கடந்த ஆண்டு (2024) பிற்பாதியில் வேலைக்குத் திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.