நான் திரும்பி வந்துட்டேன்னு சொல்லு…!!!சுப்மன் கில்லின் ஆட்டத்தை பாராட்டிய ரசிகர்கள்…!!!

நான் திரும்பி வந்துட்டேன்னு சொல்லு...!!!சுப்மன் கில்லின் ஆட்டத்தை பாராட்டிய ரசிகர்கள்...!!!

இந்திய அணியின் துணை கேப்டன் சுப்மன் கில் சமீப காலமாக சிறப்பாக விளையாடாததால் கடும் விமர்சனத்திற்கு ஆளானார்.

அவரை டெஸ்ட் போட்டிகளில் தேர்வு செய்தது நியாயமில்லை என முன்னாள் வீரர்கள் முதல் ரசிகர்கள் வரை பலரும் விமர்சித்தனர்.

இந்திய ஒருநாள் அணியின் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார். அதையும் பலர் விமர்சித்தனர். ஆனால் சுப்மன் கில் தொடர்ந்து இரண்டு அரைசதங்கள் அடித்து ஒருநாள் போட்டிகளில் தான் சிறந்த பேட்ஸ்மேன் என்பதை நிரூபித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 249 ரன்களை எதிர்நோக்கி காத்திருந்தபோது, மூன்றாவது வரிசையில் சுப்மன் கில் 87 ரன்கள் எடுத்தார்.

பின்னர் இரண்டாவது போட்டியில் இந்திய அணி 305 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய போது தொடக்க வீரராக களம் இறங்கி 52 பந்துகளில் 60 ரன்கள் சேர்த்தார்.

தொடர்ந்து இரண்டு போட்டிகளில் அரைசதம் அடித்து தற்போது ஐசிசி ஒருநாள் பேட்ஸ்மேன் தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு சுப்மன் கில் ஒரு நாள் போட்டியில் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இருந்தார்.

தற்போது மீண்டும் முதல் இடத்தை பிடித்து அனைவரின் வாயையும் அடைத்துள்ளார்.அதே நேரத்தில் இந்திய அணியில் அவர் மீதான விமர்சனங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இனி ஒருநாள் போட்டிகளில் சுப்மன் கில்லின் ஆட்டத்தை யாரும் விமர்சிக்க முடியாது.

சாம்பியன்ஸ் டிராபி தொடர் நெருங்கி வரும் நிலையில், சுப்மன் கில்லின் ரன்ரேட் இந்திய அணியை மேலும் பலப்படுத்தியுள்ளது. இரண்டாவது ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா சதம் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படியே தொடர்ந்தால் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வெல்வது நிச்சயம் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.