ஸ்ரீ தெண்டாயுதபாணி  கோவிலில் குவிந்த மக்கள்..!! தைப்பூச திருவிழா கோலாகலம்…!!

ஸ்ரீ தெண்டாயுதபாணி  கோவிலில் குவிந்த மக்கள்..!! தைப்பூச திருவிழா கோலாகலம்...!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் தைப்பூச திருவிழா கோலாகலமாக தொடங்கியது.

பக்தர்கள் சிராங்கூன் சாலையில் உள்ள ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவிலிலிருந்து காவடிகள் மற்றும் பால்குடம் ஏந்தி டேங்க் ரோட்டில் உள்ள ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

கடந்த ஆண்டை (2024) ஒப்பிடுகையில், இந்த ஆண்டு அதிகளவில் மக்கள் காவடி மற்றும் பால் குடங்களை எடுத்துச் செல்கின்றனர்.

நள்ளிரவு 12 மணிக்கு ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயிலில் முதல் பால்குடக் காணிக்கை செலுத்தப்பட்டது.

இன்று சுமார் 20,000 பக்தர்கள் கோயிலுக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஊர்வலம் செல்லும் பாதையில் 4 இசை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன

பக்தர்களின் பாதுகாப்பிற்காக 5 மருத்துவ கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சிறப்பு விருந்தினராக உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு.சண்முகம் கலந்து கொள்கிறார்.

ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் பெளர்ணமி அன்று தைப்பூசத் திருவிழா கொண்டாடப்படுகிறது.

இந்தத் தகவலை மீடியா கிராப் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.