தைப்பூசம் 2025!! விரத முறை!!

தைப்பூசம் 2025!! விரத முறை!!

அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த தைப்பூசத் திருவிழா உலகமெங்கும் இன்று கொண்டாடப்படுகிறது.தை மாதத்தில் வரும் பௌர்ணமி மற்றும் பூச நட்சத்திரம் ஒன்று சேரும் இந்த நாளை தான் தைப்பூசத் தினமாக கொண்டாடப்படுகிறது.

முருகனுக்கு விரத நாளாக மட்டுமே கருதப்படுவது தைப்பூசம்.ஆனால் இது முருக வழிபாட்டிற்கு மட்டுமில்லாமல் சிவ வழிபாடு,சக்தி வழிபாடு,குரு வழிபாட்டிற்கும் மிகவும் உகந்தது என்று கூறப்படுகிறது.

விரத முறை :

மாலை அணிவித்து முருக பக்தர்கள் பழனிக்கு பாத யாத்திரை செல்வார்கள்.பொதுவாக 48 நாள் விரதம் கடைபிடிப்பார்கள்.மேலும் தைப்பூசத் தினத்தன்று காவடி எடுத்து வழிபடும் வழக்கமும் உண்டு.

இதையெல்லாம் சிரமமாக கருதுவோர் தைப்பூசத் தினத்தன்று ஒருநாள் விரதம் கடைபிடிக்கலாம்.முருகனை வழிபடலாம்.காலை முதல் மாலை பொழுது முடியும் வரை உபவாசம் இருக்கலாம்.தேவைப்பட்டால் இளநீர்,மோர் அருந்துங்கள்.

விரதம் முடித்து சாப்பிட வேண்டியது :

தைப்பூச விரதத்தை முடித்து முருகனை வணங்கிய பின் அரசியால் மற்றும் உப்பு சேர்க்கும் உணவுகளை சாப்பிடக்கூடாது.
அதற்கு பதிலாக பால்,பழம்,கோதுமை மாவு தோசை(உப்பு போடாமல்) போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.இந்த விரதம் கணவன் மனைவியை இணைக்கும் விரதம் என்று கூறப்படுகிறது.