DBS வங்கி அறிவித்த போனஸ் அறிவிப்பால் ஊழியர்கள் மகிழ்ச்சி…!!

DBS வங்கி அறிவித்த போனஸ் அறிவிப்பால் ஊழியர்கள் மகிழ்ச்சி...!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரின் மிகப்பெரிய வங்கியான DBS அதன் ஊழியர்களுக்கு 1,000 வெள்ளி சிறப்பு போனஸ் வழங்கப் போவதாக அறிவித்துள்ளது.

ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவதற்காக 32 மில்லியன் வெள்ளியை ஒதுக்கியுள்ளதாக வங்கி தெரிவித்துள்ளது.

நிதியாண்டின் கடைசி காலாண்டில் காணப்பட்ட 10 சதவீத லாபத்திற்கு வெகுமதியாக சிறப்பு போனஸ் வழங்கப்படும் என்று கூறியுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில் DBS வங்கி 2.62 பில்லியன் வெள்ளி நிகர லாபத்தைப் பதிவு செய்துள்ளது.

இது கடந்த ஆண்டு இதே காலாண்டில் ஈட்டிய 2.39 பில்லியன் வெள்ளி லாபத்தை விட அதிகமாகும்.

சிங்கப்பூர் வங்கிகள் வரும் நிதியாண்டில் இவ்வளவு வளர்ச்சியைக் காண முடியாது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பின் வரிகள் மற்றும் பிற கொள்கைகள் உலகப் பொருளாதாரத்தை பாதிக்கும் என்று அவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.