டெய்லி ஒரு ஸ்பூன்..!!!ஆரோக்கிய பலன் அதிகம் நிறைந்திருக்கும் வெந்தயம்..!!

நாம் உண்ணும் உணவே நமது ஆரோக்கியத்தை தீர்மானிக்கிறது. நல்ல சத்தான உணவுகளை தொடர்ந்து எடுத்துக் கொண்டால் ஆரோக்கியமாக வாழலாம்.அதனால்தான் நம் முன்னோர்கள் உணவே மருந்து என்று சொன்னார்கள்.
குறிப்பாக காலையில் வெறும் வயிற்றில் நாம் எடுக்கும் முதல் உணவு மிகவும் முக்கியமானது. இது நாள் முழுவதும் நம் உடலின் ஆரோக்கியத்தை தீர்மானிக்கிறது.
காலையில் எழுந்ததும் இயற்கை உணவுகளை உண்பதால் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். இதற்கு அதிக செலவு தேவை இருக்காது.வீட்டில் உள்ள சில பொருட்களை நம்மை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.
குறிப்பாக வெந்தயத்தை நெய்யில் வறுத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் அதிக பலன் கிடைக்கும்.
வெந்தயத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது.
குடல் இயக்கத்தை மேம்படுத்தி ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. குறிப்பாக வெந்தயத்தை நெய்யில் வறுத்து சாப்பிடுவது செரிமானத்தைத் தூண்டும்.
2020 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், வெந்தயம் செரிமானத்திற்கு அவசியமான நல்ல குடல் பாக்டீரியாக்களை உற்பத்தி செய்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.
இது மலச்சிக்கல் மற்றும் வாய்வு பிரச்சனைகளை தீர்க்க உதவுகிறது.வெந்தயம் உடல் எடையை குறைக்க பெரிதும் உதவுகிறது.
காலையில் வெறும் வயிற்றில் வெந்தயத்தை நெய்யில் வறுத்து சாப்பிட்டு வந்தால் உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து உடல் எடையைக் குறைத்து கட்டுப்படுத்துகிறது.
இதில் உள்ள நார்ச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்கள் வயிற்றை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்கும்.பசியைக் கட்டுப்படுத்துகிறது.
மேலும் இது உடலுக்கு புரதம் மற்றும் கால்சியத்தை வழங்கி ஆற்றலை அதிகரிக்கிறது.
வெந்தய விதைகளுக்கு நமது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் உண்டு.
இதில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது இரத்தத்தில் உள்ள குளுக்கோஸை உறிஞ்சுவதை மெதுவாக்குகிறது.
வெந்தய விதையில் உள்ள சத்துக்களை உடல் சரியாக உறிஞ்சுவதற்கு நெய் உதவுகிறது. எனவே சர்க்கரை நோயாளிகள் வெந்தயத்தை நெய்யில் வறுத்து பயன்படுத்தினால் கூடுதல் பலன் கிடைக்கும்.
சர்க்கரை நோயாளிகள் வெந்தயத்தை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் சர்க்கரை அளவு குறையும்.
வெந்தயத்தில் சரும ஆரோக்கிய பலன்களும் நிறைய உண்டு.
வெந்தயப் பொடியை பாலுடன் சேர்த்து சாப்பிட்டால், உடலுக்கு கால்சியம் மற்றும் வைட்டமின் டி அதிகம் கிடைக்கும்.வெந்தயம் எலும்புகளை வலுப்படுத்துவது மட்டுமின்றி, மூட்டுவலி அல்லது மூட்டு பிரச்சனைகளையும் குணப்படுத்துகிறது.
வெந்தய விதையில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ளது.இது மூட்டுகளில் ஏற்படும் வீக்கத்தைக் குறைத்து மூட்டு வலியைக் குறைக்கிறது. இது எலும்புகளுக்கு இடையே உள்ள சவ்வுகளுக்கு லூப்ரிகண்ட்டாகச் செயல்படுவதாகவும் கூறப்படுகிறது.
2022 இல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், வெந்தயத்தை அரைத்து, கால் மூட்டுகளில் தடவினால், மூட்டுவலியிலிருந்து நிவாரணம் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan