இமயமலையில் புதிய தொழில் தொடங்கிய பாலிவுட் நடிகை… !!!அதுவும் என்ன தொழில் தெரியுமா…???

இமயமலையில் புதிய தொழில் தொடங்கிய பாலிவுட் நடிகை... !!!அதுவும் என்ன தொழில் தெரியுமா...???

கங்கனா ரனாவத் திரைப்படங்களில் மட்டுமின்றி அரசியலிலும் வெற்றி பெற்றவர். இவர் 2006 இல் வெளிவந்த கேங்ஸ்டர் திரைப்படத்தின் மூலம் புகழ்பெற்றவர். இந்த படத்திற்கு பிறகு பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தேசிய விருதுகளை வென்ற இவர் நடித்த எமர்ஜென்சி மற்றும் ராகவா லாரன்ஸ் நடித்த வெளியான சந்திரமுகி 2 ஆகியவை இறுதியாக வெளியிடப்பட்டன.

சந்திரமுகி 2 திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியானது ஆனால் படுதோல்வி அடைந்தது. கங்கனா ரணாவத் மனதில் பட்டதை அப்படியே பேசும் இயல்புடையவர். இதனாலையே இவர் பல்வேறு சர்ச்சைகளுக்கும் விமர்சனங்களுக்கும் ஆளாகினார். இந்நிலையில் நடிகை கங்கனா ரனாவத் இமயமலையில் ‘தி மவுன்டெய்ன் ஸ்டோரி’ என்ற உணவகத்தை தொடங்கியுள்ளார்.

வரும் 14ஆம் தேதி இந்த உணவகம் திறக்கப்படும் என்றும், உண்மையான ஹிமாச்சலப் பிரதேச உணவு வகைகள் என்றும் கங்கனா உறுதியளித்துள்ளார்.

தனது உணவகத்தை அறிமுகப்படுத்தும் வகையில் இது தொடர்பான வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் அதில், இது உங்களுடன் என் உறவின் கதை, இந்த உணவகம் என் அம்மாவின் சமையலறை ஏக்கத்திற்கான சமர்ப்பணம் என்றும் எனது நீண்ட நாள் குழந்தை பருவ கனவு இப்போது நனவாகியுள்ளது என்று பதிவிட்டுள்ளார்.

கங்கனாவின் புதிய உணவகத்திற்கு நெட்டிசன்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow us on : click here 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan