ரசிகர்கள் அதிர்ச்சி…!!உண்மையில் ஸ்ரேயாஸ் ஐயர் பிளேயிங் லெவனில் இல்லையா…???

ரசிகர்கள் அதிர்ச்சி...!!உண்மையில் ஸ்ரேயாஸ் ஐயர் பிளேயிங் லெவனில் இல்லையா...???

இந்தியா Vs இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 248 ரன்கள் குவித்தது. அடுத்து களமிறங்கிய இந்திய அணியில் சுப்மான் கில் 87 ரன்களும், ஷ்ரேயாஸ் ஐயர் 59 ரன்களும், அக்சர் படேல் 52 ரன்களும் எடுத்து அணியை வெற்றிப்பாதையை நோக்கி கொண்டு சென்றனர்.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் 30 பந்துகளில் அரைசதம் அடித்தார்.அவர் 36 பந்துகளில் 59 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.இவரது ஆட்டத்தை இந்திய ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் ஒரு உண்மையை உடைத்துள்ளார் ஸ்ரேயாஸ் ஐயர். முதல் ஒருநாள் போட்டியில் விளையாடும் பிளேயிங் லெவனில் தனக்கு வாய்ப்பு இல்லை என்று முதலில் கூறப்பட்டதாகவும், பின்னர் மற்றொரு வீரருக்கு காயம் ஏற்பட்டதால் அணியில் தான் இடம் பிடித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலி பங்கேற்கவில்லை. அவருக்கு முழங்காலில் வீக்கம் ஏற்பட்டது. இதனால் கடைசி நிமிடத்தில் விராட் கோலி விலக, நான்காவது வரிசையில் ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்கும் வாய்ப்பு கிடைத்தது.இந்த போட்டியில் விராட் கோலிக்கு பதிலாக ஜெய்ஸ்வால் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என அனைவரும் நினைத்தனர்.

இந்த போட்டியில் ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் சர்மா ஆட்டத்தை துவக்கினர்.பொதுவாக ஒருநாள் போட்டிகளில் ரோஹித் சர்மாவுடன் இணைந்து சுப்மன் கில் தொடக்க பேட்ஸ்மேனாக களமிறங்குவார்.ஆனால் இம்முறை மாற்றம் ஏற்பட்டது.

இதனால் விராட் கோலிக்கு பதிலாக ஜெய்ஸ்வால் விளையாடுகிறார் என அனைவரும் நினைத்தனர்.

உண்மையில், இந்திய அணி நிர்வாகம் ஏற்கனவே ஜெய்ஸ்வாலை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்க முடிவு செய்திருந்தது மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் பிளேயிங் லெவனில் இல்லை என்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ஏனெனில் இந்திய அணியின் நான்காவது வரிசையில் ஸ்ரேயாஸ் ஐயர் மிக சிறப்பாக ரன் குவித்து வருகிறார். 2023 உலகக் கோப்பை அரையிறுதியிலும் சதம் அடித்தார். அப்படிப்பட்ட ஒரு வீரரை இந்திய அணி நிர்வாகம் எந்த காரணமும் இல்லாமல் நீக்குவது எப்படி? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

விராட் கோலியும், ரோஹித் சர்மாவும் கடந்த சில மாதங்களாகவே பார்மில் இல்லை.அவருக்கு அணியில் இடம் கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ள இந்திய அணி நிர்வாகம், நல்ல ரன்களை எடுக்கக்கூடிய வீரரை நீக்குவது என்ன மாதிரியான முடிவு என விமர்சித்து வருகின்றனர்.