கிளியை பற்றிய இந்த விஷயங்கள் உங்களுக்கு தெரியுமா..???

கிளியை பற்றிய இந்த விஷயங்கள் உங்களுக்கு தெரியுமா..???

கிளிகள் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. அழகு பெண்களை வர்ணிக்கக்கூட பெரியவர்கள் கிளிபோல பெண் என்று கூறுவார்கள். மழலை குழந்தைகளின் பேச்சைக் கூட சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை என்று கூறுவார்கள். அப்படியான கிளிகள் நாம் சொல்வதை அப்படியே திரும்பச் சொல்லும் திறன் பெற்றதால் வீடுகளில் பிரியமாக வளர்க்கப்பட்டது.வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின் படி அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்களின் பட்டியலில் கிளி நான்காவது இடத்தில் உள்ளது. எனவே வீடுகளில் கிளி வளர்ப்பதை தடை செய்வதற்காக வனவிலங்கு பாதுகாப்பு திருத்தச் சட்டம் 2022 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.

🦜 கிளிகள் நான்கு வயது குழந்தைக்குச் சமமான
IQ திறனை பெற்றுள்ளது.

🦜 கிளி சித்தாசிடே குடும்பத்தைச் சேர்ந்த பறவை.

🦜 உலகில் 372 கிளி வகைகள் உள்ளன.

🦜 கிளியின் சராசரி ஆயுட்காலம் 50 ஆண்டுகள் ஆகும்.

🦜 கிளிகளுக்கு ஜிகோடாக்டைல் பாதங்கள் இருப்பதால் கால்களை பயன்படுத்தி அதனால் உண்ண முடியும்.

🦜 ஆப்பிரிக்க சாம்பல் கிளிகள்,அமேசான் கிளிகள் போன்றவை ஒலியை பின்பற்றுவதில் சிறந்தவை.

🦜 ஆப்பிரிக்க சாம்பல் கிளிக்கு 100 வார்த்தைகளுக்கு மேல் பேசக்கூடிய திறன் உள்ளதாம்.

🦜 பெரும்பாலும் கிளிகள் மரப் பொந்துகளில் வாழ்பவை.

🦜 தமிழ்நாட்டில் பரவலாக காணப்படுவது சிவப்பு வளைய கிளியாகும்.

🦜 பெரும்பாலான கிளி வகைகள் வெப்பமண்டலப் பகுதிகளிலேயே காணப்படுகின்றன.

🦜 ககாபோ கிளி இனத்தால் பறக்க முடியாது.